கட்டிட வரைபட அனுமதி

கட்டிட வரைபட அனுமதி - தமிழ்நாட்டில் மனைவரன்முறைப்படுத்தாத நிலங்கள் ஏராளமாக இருந்தாலும் கட்டிட வரைபட அனுமதியும் அப்படி தான் இருக்கிறது. முதலில் ஒரு நிலத்திற்கு டிடிசிபி அப்ரூவல் அல்லது சிஎம்டிஏ அப்ரூவல் கட்டாயமாகும். இது இருந்தால் தான் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி தருவார்கள்.

கட்டிட வரைபட அனுமதி


ஒரு வீடு கட்ட போகிறோம் என்றால் அதில் உள்ள அனைத்தும் சரியான அளவுகளில் கட்டப்படுகின்றதா, 30 அடி சாலை இருக்கின்றதா, செட் பேக் தொலைவு, காற்றோட்ட வசதி மற்றும் 12 மீட்டர் உயரம் உள்ளதா என்று நாம் வரைபடத்தில் குறிப்பிட வேண்டும்.

இதையும் பார்க்க: கட்டிய வீடு அப்ரூவல் வாங்குவது எப்படி

வரைபடத்தை லைசென்ஸ் உள்ள சர்வேயரிடம் அணுகி அப்ரூவல் பிளான் மற்றும் பஞ்சாயத்து பிளான் அல்லது கார்ப்பரேஷன் பிளான் தயாரிக்க வேண்டும். கிராம புறங்களில் 7 நாட்களும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 10 நாட்களும் எடுத்து கொள்வார்கள்.

இதையும் பார்க்க: தமிழக அரசு வீடு வழங்கும் திட்டம்