பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா - இரண்டும் தான் முக்கியம். ஆனால் எந்த நேரத்தில் எது முக்கியம் என்று சொல்லவே முடியாது. பட்டாவை வருவாய்துறையினரும் பத்திரத்தை பதிவுத்துறையும் செயல்படுத்துகிறார்கள். இப்போது எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய பட்டா முக்கியம். ஆனால் UDR மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் வெறும் வெள்ளை தாளும் அல்லது வாய்மொழியாகவும் தான் இடத்தினை பரிமாற்றம் அல்லது விற்பனை செய்துள்ளனர்.

உதாரணமாக ஒருவர் 40 ஆண்டு காலமாக ஒரு இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார் எனில் திடீர் என்று ஒருவர் அந்த இடத்தில் வந்து இது என்னுடைய இடம் இதற்கு பட்டா மற்றும் பத்திரம் என இரண்டுமே உள்ளது என்றால் அப்போது நீங்கள் உரிமையியல் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து உரிய ஆவணங்களாக வீட்டு வரி ரசீது, தண்ணீர் வரி மற்றும் எதிரிடை அனுபவ பாத்தியம் மூலம் வழக்கு தொடுக்கலாம். வழக்கு உங்களுக்கு சாதகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் பட்டாவும் பத்திரமும் கை சற்று குறைந்தே காணப்படும்.

பட்டா சிட்டா

மேச்சல் புறம்போக்கு மற்றும் மந்தவெளி, நீர்நிலை புறம்போக்கு இடங்களுக்கு அரசு எந்த நேரத்திலும் பட்டா வழங்காது. ஏனென்றால் இது எல்லாம் அரசாங்கம் எப்போது வேண்டுமானலும் ஆக்கிரமிப்பு செய்து கொள்ளலாம். அதை ஏன் ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறார்கள் என்றால் கால்நடைகளும், நீர் ஓட்டங்களும், தொழிற்சாலை கட்டுவதற்கும் மற்றும் அரசு ஏதாவது ஒரு விஷயங்களை அங்கு செயல்படுத்துவதற்கும் இந்த புறம்போக்கு இடங்களை வைத்து கொள்கிறது. 

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா


பத்திரம் என்பது தனி நபர் சாட்சியிடன் அந்த இடம் அவர்களுக்கு உரியது என்பர். இருந்தாலும் அதற்கு சொத்து பத்திரம் வாங்கி இருக்க வேண்டும் மற்றும் தாய் பத்திரமும் வேண்டும். இவை இல்லை எனில் நாம் விற்கவோ அல்லது வேறு ஏதாவது கூட செய்ய முடியாது.

Eservices

பட்டா பெறுவதற்கான விபரம் 

புல எண் பார்ப்பது எப்படி