பட்டா இருக்கு பத்திரம் இல்லை - பட்டா பெரியதா பத்திரம் பெரியதா

பட்டா இருக்கு பத்திரம் இல்லை, பட்டா பெரியதா பத்திரம் பெரியதா மற்றும் பட்டா முக்கியமா பத்திரம் முக்கியமா இந்த மூன்று கேள்விகளும் ஒன்றே தான். இருந்தும் ஒரு வகையில் இரண்டுமே முக்கியம் தான். ஒரு சில சமயத்தில் பட்டாவும் மற்றொரு சமயத்தில் பத்திரமும் வெல்லும். முன்னர் எல்லாம் பத்திரங்கள் பதிவு செய்தால் பட்டாவை நேம் ட்ரான்ஸபெர் செய்து கொள்ள மாட்டார்கள். நாளடைவில் பத்திரங்கள் இப்போது ரெஜிஸ்டர் செய்யும் நேரத்திலே பட்டாவின் பெயரும் உடனடியாக மாறி விடும். அந்த வசதி அப்போது இல்லை.

எடுத்துக்காட்டாக நீர்நிலை புறம்போக்கில் வாழ்கிற மக்களிடம் பத்திரம் மட்டுமே இருக்கும் ஆனால் பட்டா இருக்காது. அந்த இடத்தில் பட்டாவே வெல்லும். பத்திரம் ரெஜிஸ்டர் செய்தால் தான் பட்டாவே நம் கைக்கு கிடைக்கும். பத்திரம் ரெஜிஸ்டர் செய்த உடன் பட்டாவிலும் பெயர் மாற்றம் செய்து இருக்க வேண்டும். ஏனெனில் பத்திரம் பதிவு செய்யும்போது கூடுதலாக உங்கள் பெயர் பட்டாவில் மாற்றம் செய்தல் அவசியம்.

எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது ?

1. சரியாக உட்பிரிவு செய்திருக்க மாட்டார்கள். ஒரு புல எண்ணில் இரண்டு அல்லது மூன்று உட்பிரிவு எண்களின் நிலங்கள் இருந்தாலும் ஒரு உட்பிரிவு நிலத்தினை மட்டுமே பதிவு செய்திருப்பார்கள்.

2. நிலத்தினை வாங்கி உடனே பெயர் சேன்ஜ் செய்யவில்லை என்றாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

3. பத்திரம் மட்டுமே இருக்கும் நிலையில் பட்டாவை வாங்காமல் இருப்பார்கள். எடுத்து காட்டாக நத்தம் புறம்போக்கில் வாழும் மனிதர்கள்.

நாம் நம் இணையத்தளத்தில் பட்டா மற்றும் பத்திரம் தகவல்களை அவ்வப்போது கொடுத்து கொண்டே தான் இருக்கிறோம். ஆனாலும் மக்களுக்கு அதன் மீதான சந்தேகங்கள் தீரவில்லை.

ஏனென்றால் ஒரு சிலர்க்கு பட்டா இருக்கு பத்திரம் இல்லை. ஒரு சிலர் கையில் பத்திரம் இருக்கு பட்டா இல்லை. இதற்கான விடைகளும் நாம் தந்து கொண்டே தான் இருக்கிறோம். கிரைய பத்திரம் 

பட்டா இருக்கு பத்திரம் இல்லை

நாம் எந்த கேள்வியானாலும் அதற்கான விடையினை இங்கே காணலாம். அல்லது சார் பதிவாளரியிடம் நாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

ஈசி பட்டா 

தமிழ் நிலம் 

கிராம நத்தம் 

Patta Chitta