பட்டா சிட்டா புகைப்படம் - பட்டா அல்லது சிட்டாவின் புகைப்படங்களை நாம் வருவாய்த்துறை பராமரிக்கும் Eservices வெப்சைட் மூலம் எடுத்து கொள்ளலாம். ஏற்கனவே பட்டா நீங்கள் எடுத்திருந்தால் தற்போது மிகவும் சுலபமே. ஏனெனில் பட்டாவினை எடுக்கும்போது மாவட்டம், கிராமம் மற்றும் பட்டா எண் என்டர் செய்தால் பட்டா நகல் எடுத்து விடலாம். இதுவரை பட்டா ஆன்லைனில் எடுக்காதவர்கள் அல்லது எடுக்க முடியாதவர்கள் கீழ்கண்ட வழிகளை பின்பற்றலாம்.
வழிமுறைகள்
1. Eservices வெப்சைட் செல்ல வேண்டும்.
2. அதில் கேட்கும் விவரங்களான மாவட்டம், தாலுகா மற்றும் வில்லேஜ் போன்றவை என்டர் செய்யவும்.
3. பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை குறிப்பிட வேண்டும். அப்படி பட்டா எண் குறிப்பிடாதவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் சர்வே எண் குறிப்பிட வேண்டும்.
4. சர்வே எண்ணும் தெரியாதவர்கள் உரிமையாளரின் பெயரில் முதல் மூன்று எழுத்து போடவும்.
5. இந்த வழிமுறைகளெல்லாம் முடிந்த பின்னர் நீங்கள் Ok கொடுத்தால் புகைப்படம் தோன்றும்.
சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ்
