பதிவுத்துறை செய்திகள் 2024

பதிவுத்துறை செய்திகள் 2024 - பத்திரப்பதிவு துறையில் சமீப காலகட்டங்களில் பதிவுகள் நிறைய பதிவு செய்யப்படுகிறது. கூட்டு நிதி நிறுவனங்கள், சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பத்திர பதிவுகள் தொடர்ந்து அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பதிவுத்துறை செய்திகள்


பதிவுத்துறையை பொறுத்தமட்டில் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் ஆகியவைகள் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதனை அவ்வப்போது சுற்றறிக்கை மற்றும் அரசாணை மூலம் பதிவு துறையானது மக்களுக்கு Tnreginet வெப்சைட் வாயிலாக தெரியப்படுத்துகிறது.

இதையும் பார்க்க: tamilnilam

செய்திகள் 2023

1. தடை செய்யப்பட்ட நிலங்களை பதிவு செய்யக்கூடாது என்று பதிவு துறை அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில் மொத்தமாக 5409 நிலங்கள் இருப்பதாகவும் அதனை பதிவு செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் சர்வே எண்கள், நிலம் விற்பவரின் பெயர், நிலம் வாங்கியவரின் பெயர், முகவரிகள், கட்டணம் என அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.

2. நாளுக்கு நாள் பதிவுகள் அதிகமாக உள்ள காரணத்தினால் சனிக்கிழமையும் பத்திர பதிவு அலுவலகம் செயல்படும் என்று செய்தியை பதிவுத்துறையானது வெளியிட்டது. அதாவது ஒவ்வொரு மண்டலங்களில் இருந்து குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் மட்டும் அன்றைய தினம் திறந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதனை தட்கல் சார் பதிவாளர் அலுவலகம் என்றும் அழைக்கலாம்.

இதையும் பார்க்க: வில்லங்க சான்று online