பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் - எதற்காக இந்த பத்திர பதிவு கேட்டால் ஒருவர் தனக்கு நிலம், மனை, வீடு உரிமை உள்ளதாக அரசாங்கம் எழுத்து பூர்வமாகவும் ஆதார பூர்வமாகவும் உரிமை மாற்றம் செய்து கொடுப்பதாகும். அதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொன்றிருக்கும் பதிவு கட்டணங்கள் வேறுபடும். ஆனால் அனைத்து விதமான பத்திரங்களையும் கண்டிப்பாக பதிவு செய்தல் வேண்டும். இது அரசாங்கத்தின் கட்டாயமில்லை. ஏனென்றால் வாய்மொழியாய் அல்லது வெறும் வெள்ளை தாளில் எழுதப்பட்டதெல்லாம் செல்லாது எனவும் நூறு ரூபாய்க்கு மேல் உள்ள எந்த ஒரு அசையா சொத்துக்களையும் நிச்சயம் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
அப்டேட் மார்ச் 30 2022
பத்திர பதிவு செய்யும்போது அங்கு கட்டிடம் அல்லது வீடு இருப்பதை சொத்து பத்திரம் ரெஜிஸ்டர் செய்யும்போது இருக்க வேண்டும். வெறும் காலி இடம் சொல்லி அந்த இடத்தினை ரெஜிஸ்டர் செய்ய கூடாது எனவும் அப்படி செய்தால் அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பும் பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரும் சிக்கலில் மாட்டி கொள்வார் எனவும் பதிவு உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பத்திரம் ரெஜிஸ்டர் செய்யவில்லையென்றால் என்ன நடக்கும்
பணம் பரிமாற்றம் மட்டுமே ஒரு நிலத்திற்கு நடந்திருந்தால் கண்டிப்பாக அங்கு சட்டம் உள் நுழைய வாய்ப்பில்லை. பணம் கொடுத்த நபர் தான் ஏமாற்றம் அடைவார். அதன் மூலம் சாட்சிகள் இருந்தாலும் பயனற்றது எனலாம். அதனால் தான் பதிவு கண்டிப்பாக செய்யணும்.
ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. புதிதாக செய்பவர்களுக்கு சில பல விஷயங்களை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பை கண்டிப்பாக பின்பற்றி இருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் நிலத்தின் அரசாங்கத்தின் மதிப்பு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ பதிவு செய்திருந்தால் இந்திய முத்திரை சட்டம் 47ஏ இன் கீழ் முத்திரை தணிக்கை அதிகாரிகள் உங்கள் நிலத்தினை ஆராந்து அதில் தவறுகள் இருந்தால் அந்த ஆவண பதிவு ரத்து செய்யப்படும் என சுற்றறிக்கையில் 2018 இல் உள்ளது.
ஆவணங்களும் கடைப்பிடிக்க வேண்டியதும்
1. நிலத்தினை எழுதி வாங்குபவர் அனைத்தையும் சரியாக படித்த பின்னர் தான் அதில் கையொப்பம் இட வேண்டும். உதாரணமாக அந்த இடம் புறம்போக்கு, இனாம், அனாதினம், நிலவியல் பாதை, பவர் விஷயங்கள் இருந்தால் உன்னிப்பாக அதனை கவனித்து விசாரித்த பின்னர் கையெழுத்து இடுதல் அவசியம்.
2. எழுதி கொடுப்பவர் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று சாட்சிகளோடு இருத்தல்.
3. வருவாய்துறையின் பட்டா ஒரிஜினல் அவசியம்
4. இரண்டு பேர்களின் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம்
5. மூல பத்திரம்
6. பதிவிற்கான பணம்
7. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் பத்திரப்பதிவு டிபார்ட்மென்ட் இருக்காது.