பத்திர பதிவு செய்திகள் 2024

பத்திர பதிவு செய்திகள் 2024 - பத்திரப்பதிவு துறை செய்தி தினமும் வந்து கொண்டே தான் இருக்கிறது. அதனை சுற்றறிக்கை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். முதலாவதாக மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை சார் பதிவாளர் அலுவலகத்தில் எப்போதும் உண்டு என்பதனை 01.01.2022 அன்று அரசு வெளியிட்டது. அதில் குறிப்பிட்டுள்ள செய்தி என்னவென்றால் எழுபது வயதை கடந்த ஒரு நபர் சார் பதிவாளர் அலுவலகத்தில் எப்போது வந்தாலும் அவருக்கு முன்னுரிமை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்டேட் ஜூன் 01, 2022

இனி வரும் காலங்களில் வேகமாக பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பதிவு கட்டணமாக 5000 செலுத்த நேரிடும். அப்படி செய்தால் உங்களுக்கு மிக குறுகிய நாட்களில் பதிவு செய்து தர படும் என்று பத்திரப்பதிவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

அப்டேட் மார்ச் 04, 2022

இனிமேல் எந்த பதிவு துறை சம்மந்தமான வழக்குகள் இருந்தாலும் அது நேரடியாக நீதிமன்றத்தில் தான் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்கள். ஏனென்றால் வழக்குகளை விரைவில் முடிக்கவும் ஆன்லைனில் ஏற்படும் காலதாமதத்தை சரி கட்டவும் இத்தகைய முடிவு எடுக்க பட்டுள்ளது. 

பத்திர பதிவு செய்திகள் 2024


இரண்டாவதாக பதிவு செய்யாத பாக பிரிவினை சொத்துகளை சம்மந்தப்பட்டவர் பெற முடியும் என்று நீதிமன்றம் ஒரு வழக்கில் 27.01.2022 அன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ளது என்ன வென்றால் ஏற்கனவே ஒரு வெள்ளை பேப்பரில் எழுதிய பாக பிரிவினை சொத்துக்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் அவர்களுக்கு உண்டான சொத்துகள் சேரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள். இது இந்திய பதிவு சட்டம் பிரிவு 17 உட்பிரிவு 2 வி இன் படி பதிவு செய்ய தேவை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பத்திர பதிவு இன்றைய தீர்ப்பு

பத்திரம் சரிபார்த்தல்

மூன்றாவதாக சனி கிழமைகளில் கூட சார் பதிவாளர் மார்ச் மாதம் செயல்படும் என்று கூறி இருக்கிறார்கள். ஏனென்றால் மார்ச் மாதம் தான் ஒவ்வொரு ஆண்டின் நிதி ஆண்டு என்று சொல்வார்கள். அப்படி இருக்கும் நேரத்தில் மொத்த வேலைகளையும் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்ற கட்டாயம் சனி கிழமைகளில் பதிவு துறை செயல்படும். 

இங்கே ஒவ்வொரு பதிவு துறைகளின் செய்திகளையும் அவ்வப்போது இந்த பக்கத்தில் அப்டேட் செய்கிறோம். பயனாளர்கள் இதனை படித்து பயன் பெறுங்கள்.

Tnreginet