பத்திர பதிவு இன்றைய தீர்ப்பு

பத்திர பதிவு இன்றைய தீர்ப்பு - பத்திரப்பதிவில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை சார் பதிவாளர் அலுவலகமும் அவ்வப்போது கடைபிடித்து வருகிறது. ஆனால் மக்களில் ஒரு சிலருக்கு இந்த தீர்ப்புகள் தெரியாத வண்ணம் உள்ளனர். இதனால் தெரியாமல் வாங்கும் லேண்ட் பின்னாளில் பிரச்சனையை சந்திக்க கூடும்.

பத்திர பதிவு இன்றைய தீர்ப்பு


சென்னை உச்ச நீதிமன்றம் 27.01.2022 அன்று பத்திரப்பதிவு சம்மந்தப்பட்ட ஒரு அரசாணையை வெளியிட்டது. அது என்னவென்றால் நீர்நிலைகளில் உள்ள நிலங்களை ஒரு தனிப்பட்ட நபர் வாங்க கூடாது என்றும் அப்படி வாங்கி இருந்தால் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யலாம் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

ஒருவர் நீர்நிலை இருக்கும் நிலத்தினை வாங்க கூடாது. மேலும் நீர்நிலை அல்லாத பகுதிகளில் வாங்கும் ஒவ்வொரு நபரும் ஒரு சுய உறுதிமொழி ஒன்றை எழுதி கொடுக்க வேண்டும். அந்த சுய உறுதிமொழியில் நான் வாங்கும் இடத்தில் நீர்நிலைகள் இல்லை என அதில் குறிப்பிட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீர்நிலை இல்லாத பகுதியில் தான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அப்படி மீறும் பட்சத்தில் அவர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்க படும் என்று சென்னை உச்ச நீதிமன்றம் அரசாணையில் கூறியிருக்கிறது.

பட்டா சிட்டா

நில அபகரிப்பு சட்டம் Pdf

Tnsic.Gov.in