பசு கிசான் கடன் அட்டை விண்ணப்பம் Pdf - பசு கிசான் கார்டு பெற்றவர்கள் அதிகமாக கிராம புறங்களில் தான் இருக்கிறார்கள். நிறைய விவசாயிகளுக்கு இந்த வகை Scheme இருப்பதே தெரியாத நிலையில் உள்ளனர். கால்நடை வைத்திருப்பவர்களும் இந்த வகை திட்டத்தின் கீழ் பெறப்படும் மானியம், லோன் மற்றும் கடன் எளிதாய் பெற முடியும்.
இந்த பசு திட்டத்தை 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் ஏழை விவசாயிகள் அவர்களின் கால்நடைகள் மற்றும் வருமானத்தை எளிதில் ஈட்ட முடியும். இந்த scheme மூலம் ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வரையும் கடன் பெறலாம். இதற்காக அரசாங்கம் மிகவும் குறைந்த வட்டியில் மக்களுக்கு தருகிறது.
பிரதம மந்திரி விவசாய நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு விவசாய கடன் பெறும் விண்ணப்பம்
இதன் விண்ணப்பம் நீங்கள் ஆன்லைனில் பெற வாய்ப்பில்லாத காரணத்தினால் உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவர் மற்றும் அதன் சார்ந்த அலுவலகத்தில் இந்த திட்டம் அப்ளை செய்ய வேண்டுமென்று ஒரு கோரிக்கை கேளுங்கள். அதன்படி அவர் விண்ணப்பங்கள் மற்றும் கிசான் கடன் அட்டை பெற தேவையான ஆவணங்கள் அல்லது விவரங்களை கேட்பார். அதற்கு நீங்கள் சரியான விவரங்கள், ஆவணங்கள் மற்றும் எத்தனை வருடம் கால்நடை தொழிலில் ஈடுபட்டு உள்ளீர்கள் என அனைத்தும் அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
எருமை மாடு, பசு மாடு மற்றும் ஆடு இவைகளில் ஏதாவது ஒன்றை பராமரித்து வந்தாலே இந்த மானியத்தை பெறலாம். மேலும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் தவிர்த்து அதிகமாக கூட நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் பெறலாம். எவ்வளவு சீக்கிரமே பணம் கட்டிக்கிறீர்களோ அந்தளவு வட்டியும் குறையும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி விண்ணப்பம்