ஊராட்சியில் கட்டிட அனுமதி

ஊராட்சியில் கட்டிட அனுமதி கட்டணம் மற்றும் விதிமுறைகள் - எந்த ஒரு வீட்டு மனையாக இருந்தாலும் அதற்கு எப்படி டிடிசிபி அப்ரூவல் கட்டாயமோ அதேபோல் தான் கிராம ஊராட்சியிலும் அனுமதியும் வாங்க வேண்டும். கிராம பஞ்சாயத்திற்கு கீழ் இயங்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் நிச்சயம் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெறுதல் அவசியமாகும்.

ஊராட்சியில் கட்டிட அனுமதி


கட்டிடத்தின் வரைபடம் சரியானதாக இருக்க வேண்டும். அது சாதாரண கட்டிடமாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் சரியான வரைபடம் அரசு பதிவு பெற்ற சிவில் என்ஜினீயர் மூலம் தயாரித்து தர சொல்ல வேண்டும். மற்ற இதர ஆவணங்களை எடுத்து கொண்டு கிராம பஞ்சாயத்து தலைவரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

இதையும் பார்க்க: பஞ்சாயத்து ராஜ் சட்டம்

ஒரு சதுர அடிக்கு ரூபாய் 5 முதல் 10 ரூபாய் தற்போது பெறப்பட்டு வருகின்றது. அடுக்குமாடி கட்டிடம் என்றால் அதற்கு ஒரு கட்டணம், வரைபடத்தில் உள்ளவாறு கட்டி இருக்கின்றார்களா என ஆராய்வதற்கு ஆய்வு கட்டணம், கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய் 1, 00, 000 க்கு 1000 என கொடுக்க வேண்டும்.

குறிப்பு

கட்டிடம் கட்டி முடித்த பின்னர் ஏதாவது மாறுதல் இருந்தால் அதற்கு அபிவிருத்தி கட்டணம் வசூல் செய்வார்கள்.

இதையும் பார்க்க: ஊராட்சி வீட்டு வரி