ஊராட்சி வீட்டு வரி online

ஊராட்சி வீட்டு வரி online எவ்வளவு ( ooratchi veetu vari online payment ) - நம்முடைய சொந்த ஊரில் நாம் வசிப்பதற்காக பெறப்படும் வரி ஊராட்சி வரி எனலாம். கிராமங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டண வரி போன்ற வரிகளும் கட்டப்படும். மேலும் இதனை பெற அந்தந்த ஊரில் உள்ள கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம பணியாளர்கள் வாங்கி விடுவார்கள். இதற்காக நாம் எங்கும் அலைய தேவை இல்லை எனலாம். இதில் மின்கட்டண வரி நாம் ஆன்லைனிலும் அல்லது நேராக சென்று அலுவலகத்திலும் கட்டலாம். இதற்காக வீடு தேடி யாரும் கலெக்ட் செய்யமாட்டார்கள். இந்த சட்டம் 1994 பிரிவு 172 இன் கீழ் செயல்பட்டு வருகிறது. சென்ற வருடம் 2021 இல் மொத்தமாக 288 கோடி வீட்டு வரியாக மக்கள் செலுத்தி இருந்தனர்.

ஊராட்சி வீட்டு வரி online


நாம் முந்தைய தலைப்புகளில் இதனை பற்றி பார்த்தோம். ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இங்கே நாங்கள் இரண்டு விதமான தலைப்புகளை தருகின்றோம்.

1. வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி 

2. வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி 

நாங்கள் கொடுத்துள்ள மேலே இரண்டு தலைப்புகளில் வீட்டு வரி சம்பந்தபட்ட கேள்விகள் சந்தேகங்கள் மற்றும் இதர பிரச்சனைகள் எல்லாம் அதில் அப்டேட் செய்துள்ளோம். அதனை படித்து தெளிவுப்படுத்தி கொள்ளவும். வீட்டு வரியை இரண்டு விதமாகவும் கட்டலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் Vptax மற்றும் நேரடி என இரு வெவ்வேறு வழிகளில் நாம் கட்டணங்களை செலுத்தலாம்.

இதில் வீட்டு வரிக்கென்று தனித்தனியாக ஒவ்வொரு வெப்சைட் உள்ளன. அவைகள் Vptax ( ஊராட்சி ), Tnurbanepay ( நகராட்சி ), கார்பரேஷன் ( சென்னை மற்றும் இதர மாநகராட்சிகள் ) ஆகும். ஆன்லைனில் கட்ட முடியாதவர்கள் அல்லது கட்டணம் பிரச்சனைகளுக்கு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கேட்கலாம்.