ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம்

ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம் - இப்பொழுது ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது மிக மிக சுலபம் ஆகிவிட்டது. முன்பு எல்லாம் நாம் பதிவு அலவலகத்திற்கு சென்று தான் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும். இதற்காக தமிழ்நாடு அரசு இணையதளத்தை வெளியிட்டது. அதில் நீங்களே பெயர் மாற்றி கொள்ளலாம். நீங்களே என்றால் அருகில் உள்ள இ சேவை மையம் சென்று தான் விண்ணப்பிக்க முடியும். 

அப்ளை செய்யும் நபர் அதற்கு தகுந்தாற் போல் ஆவணங்களை சரியாக எடுத்து சென்றால் உங்கள் பட்டா மாற்றம் உடனடியாக மாற்றப்படும். அப்படி அவர்கள் உங்கள் விண்ணப்பங்கள் சப்மிட் செய்து ரூபாய் 60 செலுத்திய உடன் என்றைக்கு பட்டா மாறுதல் செய்யப்படும் என்றும் அல்லது எந்த வருவாய்த்துறை அலுவலகரிடம் செல்ல வேண்டும் என்பதனையும் அவர்களே கூறி விடுவார்கள்.

மூன்று விதமான பட்டாக்களை மட்டுமே தற்போது மாற்ற முடியும். ஒன்று பட்டா மாறுதல் இரண்டு உட்பிரிவு பட்டா மூன்று கூட்டு பட்டா. மற்ற பட்டாக்களை கூடிய விரைவில் பத்திரப்பதிவு துறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம்


அதில் கேட்கும் அனைத்தும்  நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, சிட்டா மற்றும் சர்வே நம்பர் அனைத்தையும் கொடுக்க வேண்டும். மேலும் அதற்கான 60 ருபாய் கட்டணத்தையும் கட்ட வேண்டும்.

Eservices 

Survey Number 

பட்டா வாங்குவது எப்படி