நத்தம் என்றால் என்ன - நத்தம் என்பது குடியிருக்கும் பகுதி தான் நத்தம் எனப்படும். அதில் கிராம நத்தம் மற்றும் நத்தம் புறம்போக்கு என இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம்.
கிராம நத்தம்
மக்கள் குடியிருக்கும் பகுதி கிராம நத்தம் எனலாம். அவ்வாறு குடியிருக்கும் பகுதிக்கு பட்டா, மின் இணைப்பு மற்றும் தண்ணீர் வசதி வேண்டி உரிமை கோர முடியும். 1990 க்கு மேல் நத்தம் நிலவரி திட்டம் தொடங்கியது. அரசே மக்கள் பயன்பாட்டிற்காக விட படும் நிலம்.அது மட்டுமில்லாமல் அதற்கு பட்டா கொடுத்து வசூல் செய்யவும் ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னர் விவசாய நிலங்களுக்கும் வரி வசூல் செய்தனர்.
நத்தம் புறம்போக்கு
அரசின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை நத்தம் புறம்போக்கு எனலாம். விவசாயம் அல்லாத இடம் புறம்போக்கு என்றும் கூட நாம் கூறலாம். இதனை அரசு சமுதாய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும். நீர்நிலைகள், கால்வாய்கள், ஏரி, குட்டை இது போன்ற இடங்களுக்கு நிச்சயம் பட்டா உரிமை கோருவது கஷ்டம். ஆனால் அந்த இடத்தை அவர்கள் அனுபவித்து வரும் நிலையில் பட்டா வேண்டி கோர முடியும் என்று 1971 அரசாணை சொல்கிறது. கண்டிப்பாக அவர்கள் 30 வருடமாவது அந்த இடத்தை அனுபவித்து வந்து இருக்க வேண்டும். அவர்களுக்கு ஸ்பெஷல் வட்டாச்சியர் 35 சென்ட் வர இடம் மட்டுமே பட்டா வாங்கி தருவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நில அனுபவ சான்றிதழ் கொடுத்து தாசில்தாரிடம் அப்ளை செய்யலாம்.