முதலமைச்சர் தனிப்பிரிவு போன் நம்பர், முதலமைச்சர் தபால் முகவரி - இந்த திட்டம் மாண்புமிகு முதலமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதற்கென்று ஒரு இணையத்தளத்தினை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அரசின் சேவைகள், திட்டங்கள், செயல்கள் குறித்த மனு, கேள்வி மற்றும் புகார்களை இங்கே கொடுக்க முடியும்.
இங்கு மனு அளிப்பவர்கள் தமிழ்நாடு அரசாங்கம் கீழ் வருகின்ற எந்த துறையின் மீதும் மனு அளிக்கலாம், புகார் கொடுக்கலாம். இதற்காக கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவை இல்லை.
Cmcell இணையதளத்தின் கீழ் மனு அளிப்பவர்கள் சரியான விவரங்கள் மற்றும் சரியான கேள்விகள் கேட்க வேண்டும். நீங்கள் மனு அளித்த 90 நாட்களுக்குள் உங்களுக்கு பதில் கட்டாயம் வரும். தினசரியும் நீங்கள் உங்கள் மனு எந்த நிலையில் உள்ளது என கண்டறியலாம்.
இதையும் படிக்க: முதலமைச்சரின் உதவி மையம் உங்கள் கோரிக்கை மனு எண்
தமிழ்நாடு முதலமைச்சர் தபால் முகவரி மற்றும் தொலைபேசி எண்
சிறப்பு அதிகாரி,
முதல்வரின் முகவரி துறை,
தலைமை செயலகம்,
சென்னை 600 009,
எண் - 1100.
இதையும் படிக்கலாமே: முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு