முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி 2024

முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி 2024 மாதிரி புகார் 2024 மனு அனுப்பும் முகவரி ( muthalamaichar thani pirivu address in tamil ) - முதலமைச்சருக்கு மக்கள் நேரடியாக சென்று மனு அல்லது கடிதமோ கொடுக்கும் சூழ்நிலையினை தவிர்த்து அவருடைய தனிப்பிரிவு கீழ் நாம் கொடுக்கும் மனு பரிசீலிக்க படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்தமாக இரண்டு வழிகளில் புகார்களை நாம் தர முடியும். ஒன்று தபால் மூலமாகவும் மற்றொன்று இணையதள மூலமாகவும் கடிதங்களை அனுப்பலாம்.

முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி 2024


முதலமைச்சர் தனிப்பிரிவு Address

சீப் மினிஸ்டர் ஸ்பெஷல் செல் 

Secretariat

சென்னை - 600 009

Email - Cmcell@tn.gov.in

Contact Number - 044 2567 1764

முதலமைச்சர் மனு அனுப்பும் முகவரி மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகவரிக்கு நீங்கள் கைப்பட எழுதிய கடிதங்களை அனுப்பினால் cm தனிப்பிரிவின் கீழ் உங்கள் மனு ஏற்கப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கைளை உடனடியாக எடுக்கப்படும். எந்த வித மனுவாக இருந்தாலும் சரி நீங்கள் அனுப்ப முடியும். உதாரணமாக சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் நூலகம் வேண்டி என எந்த காரணங்களாக இருந்தாலும் அதனை அனுப்புநர், பெறுநர், பொருள் மற்றும் கையொப்பம் இட்டு அனுப்பலாம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் Online Complaint Website

Cmcell என்கிற வெப்சைட் ஆன்லைனில் மக்கள் புகார்களை தருவதற்கே உள்ளது. முதலில் பயனாளர்கள் லாகின் செய்து உங்கள் மனுக்களை இரண்டு நிமிடத்திலே கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த மனுவை அந்த இணையதளத்தில் ட்ராக் செய்யும் வசதியும் அதில் உள்ளது.

மக்களிடம் நிறைய நிறைய சந்தேங்கள் கொட்டி கிடக்கும். அது என்னவென்றால் நாம் கொடுக்கும் மனு போல் லட்ச கணக்கில் குவிந்தால் நம்முடைய மனுக்களை பரிசீலினை செய்வார்களா என்ற கேள்விகள் எழும். மக்கள் அனுப்புகின்ற மனு எந்த டிபார்ட்மென்ட் மற்றும் அதற்குண்டான அலுவலகர் மற்றும் எந்த இடம் போன்றவைகள் எல்லாம் தனி தனியே விசாரித்து எவ்வளவு சீக்கிரம் நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டா சிட்டா

மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி