மின் இணைப்பு துண்டிப்பு கடிதம் - பொதுவாகவே மக்கள் அதிகளவில் மின் இணைப்பிற்கு வேண்டி தான் கடிதம் மற்றும் மனுக்கள் கொடுப்பார்கள். ஆனால் ஒரு சிலரே மின் இணைப்பு வேண்டாம் என்று கொடுப்பார்கள். அது என்னென்ன காரணங்கள் மற்றும் ஏன் என்பது பற்றி பார்க்கலாம்.
வீடு மட்டுமல்லாது ஏகப்பட்ட இடங்களில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும். மற்ற இடங்களுக்கு ஒருவர் செல்வதாக அல்லது Tariff change செய்வதாக இருந்தாலும் அதனை துண்டிக்க சொல்லி மின்சார வாரியத்திற்கு நாம் எழுத்துபூர்வகமாக நிச்சயம் சொல்ல வேண்டும். ஏனெனில் அதனை தவறாக பயன்படுத்துவது அதாவது அதனை வணிக ரீதியாக உபயோகப்படுத்துவது போன்ற செயல்கள் அதிகமாக நடக்கின்ற காரணத்தினால் இதனை மேற்கொள்ள வேண்டும்.
மற்ற விண்ணப்பம் எழுதுவது போல் இதற்கும் விடுநர், பெறுநர் மற்றும் பொருள் கட்டாயம் எழுத வேண்டும். தபாலில் அனுப்புவதாக இருந்தால் வில்லை பொருத்த வேண்டும்.
மதிப்பிற்குரிய ஐயா,
நான் வெளியில் செல்ல அல்லது அந்த இடத்தை விட்டு முழுவதுமாக செல்ல வேண்டிய காரணத்தால் எனக்கு மின் இணைப்பு தேவைப்படாது. அதே சமயத்தில் அதனை வேறு யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்கிற நோக்கத்தோடு நான் இருக்கிறேன். அதனால் எனது வீட்டிற்கு தாங்கள் ஏற்கனவே போட்டுள்ள மின் இணைப்பை துண்டிப்பு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.