மாவட்ட வருவாய் அலுவலர் பணிகள்

மாவட்ட வருவாய் அலுவலர் பணிகள் - முதலில் இதற்கு ஆங்கிலத்தில் எப்படி அழைப்பது என்று பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் DRO ( District Revenue Officer ) என்று அழைப்பார்கள். RDO எனப்படும் வருவாய் கோட்டாட்சியரும் இவரும் ஒரே நபர் என்று மக்கள் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் இவ்விருவருமே வேறு வேறு என்பதை நீங்கள் புரிந்து கொள்தல் மிக அவசியமே. RDO கோட்டாட்சியர் எனப்படுபவர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களை மட்டும் பார்த்துக்கொள்வார். ஆனால் டி ஆர் ஓ எனப்படுபவர் மாவட்டத்தினை ஆட்சியர் உறுதுணை கொண்டு பார்த்து கொள்வார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பணிகள்


DRO என்றால் என்ன

மாவட்ட ஆட்சியருக்கு கீழ் இவர் நியமிக்கப்படுகிறார். பதவி உயர்வு காரணமாக இவர் செலக்ட் செய்யப்படுகிறார். முதலில் RDO ஆறிலிருந்து ஒன்பது ஆண்டுகள் பதவில் இருப்பவர்கள் பெரும்பாலும் DRO ஆக நியமனம் செய்யப்படுகிறார்கள். ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த வருவாய் அமைப்புகளை இவர் தான் மேற்பார்வை மற்றும் உத்தரவுகளை பிறப்பிப்பார்.

தாசில்தார் பணிகள் என்றால் என்ன

நிர்வாகங்கள்

1. கிராம அலுவலகர்கள்

2. கோட்டாட்சியர்

3. வட்டாட்சியர்

4. துணை வட்டாட்சியர் பணிகள்

5. நில நிர்வாகம்

6. கனிமம் மற்றும் சுரங்கம்

7. நுகர்பொருள் வழங்கல்

பணிகள் மற்றும் அதிகாரங்கள்

இவருடைய சிறப்பு பணி என்னவென்றால் மாவட்ட ஆட்சியர் ஒரு சில நேரத்தில் விடுமுறைக்கோ அல்லது அந்த இடத்தில் நியமிக்கபடவில்லை என்றால் இவர் கலெக்டர் ஆக செயல்படுவார். அதாவது கலெக்டருக்கு அடுத்த நிலையில் இவர் உள்ளார். மேற்கண்ட நிர்வாகங்களையும் தாண்டி சட்டம் மற்றும் ஒழுங்குமுறையும் இவர் மேற்கொள்கிறார். இவர் முதன்மை நீதிபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

வருவாய் ஆய்வாளர் பணிகள் மற்றும் கடமைகள்