மனு எழுதுவது எப்படி PDF

மனு எழுதுவது எப்படி PDF முதலமைச்சர், பட்டா வேண்டி கருணை மனு - புகார் மனு என்பது ஒரு தனிப்பட்ட அல்லது மக்களின் கோரிக்கை ஆகும். அந்த கோரிக்கையானது பல பேரிடம் முறையிட்டு ஏதும் பலனில்லாமல் சென்று கடைசியாக மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சேர்த்து அதில் உள்ள கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை தான். எதற்காக இந்த மனு மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கொடுக்கிறார்கள் என்றால் எடுத்துக்காட்டாக ஒரு ஊரில் ரொம்ப நாட்களாக தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. அதனை சரி கட்ட அந்த ஊர் மக்கள் ஊர் பஞ்சாயத்து அலுவலகங்களில் முறையீடு இடுகின்றனர். அப்படி பல முறை செய்து எந்த பயனும் இல்லாமல் வீடு திரும்புகின்றனர்.

மனு எழுதுவது எப்படி PDF


அதனால் தான் மக்கள் கலெக்டர் இடம் சென்று இந்த கடிதங்களை கொடுத்து அவரவர் கோரிக்கையை நிறைவேற்றி கொள்கின்றனர். இந்த மனுவானது மக்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதிலை மாறாக தனிப்பட்ட நபரும் சேர்ந்து இந்த மனுக்களை கலெக்டர் இடம் கொடுக்கலாம். முதலில் மேலே என்ன விஷயம் வேண்டி மனு தர போகிறீர்கள் என மென்சன் செய்திருக்க வேண்டும்.

விடுநர் 

உங்கள் பெயர் அல்லது உங்கள் ஊரின் பெயர், 

விலாசம், 

பின் கோட்.

பெறுநர் 

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,  

விலாசம்,    

பின் கோட்.

பொருள் : எந்த வசதி வேண்டி மனுக்களை தர உள்ளீர்கள் என இதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும் 

நான் அல்லது நாங்கள் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறோம். எனக்கு அல்லது எங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கிறது என தெள்ள தெளிவாக ஒவ்வொன்றாக விவரித்து எழுதினால் நல்லது. கடைசியில் இந்த மனுக்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உண்டான பணிகளை முடித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என அதில் எழுதி இருத்தல் அவசியம்.

குறிப்பு 

மேற்கண்ட மனுவை வைத்து நீங்கள் எழுத வேண்டிய அவசியம் இல்லை. இது வெறும் சாம்பிள் தான் நீங்கள் எவ்வாறு எழுத வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளோம். உங்களுக்கு நேரில் சென்று மனுவை தர முடியவில்லை எனில் போஸ்ட் வழியாகவும் அனுப்பலாம்.

மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி

வீட்டிலிருந்தபடியே சிறு தொழில் செய்வது எப்படி

Gdp.tn.gov.in