மாநில தகவல் ஆணையர் 2024

மாநில தகவல் ஆணையர் 2024 பெயர் தலைவர் - எப்படி மத்திய அரசிற்கு என்று தலைமை தகவல் ஆணையர் மற்றும் அவரின் கீழ் உள்ள மற்ற ஆணையர்கள் செயல்படுகிறார்களோ அதே போல் தான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்கின்றன. தமிழ்நாடும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இல் தான் தொடங்கப்பட்டது. இதன் நோக்கமே  நிறுவனங்கள், பொது நிறுவனங்களில் மீது வரும் புகார்கள், மனுக்கள் மற்றும் தகவல்களை கொடுத்தல் ஆகும்.

மாநில தகவல் ஆணையர் 2024


இவர்களை ஆளுநர் அவர்கள் தான் நியமனம் செய்வார். மேற்படி இதற்கு முதலமைச்சர், முதலமைச்சர் பரிந்துரைக்கும் மாநில அமைச்சர் மற்றும் சட்ட பேரவை எதிர்க்கட்சி தலைவர் என ஒரு குழுவாக செயல்பட்டு தலைமை ஆணையர் மற்றும் இதர ஆறு ஆணையர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வார்கள். ஆரம்ப காலக்கட்டத்தில் இரண்டு பேரை மட்டுமே நியமனம் செய்தார்கள். பிறகு 10 பேருக்கு மிகாமல் தலைமை ஆணையருக்கு கீழ் வரும் தகவல் ஆணையர்களை நியமனம் செய்யலாம் என சட்டம் கொண்டு வந்தது.

தமிழ்நாடு கடன் தொகை 2024

பதவி காலம், சம்பளம், பணிகள் மற்றும் அதிகாரங்கள்

இவர்களின் பதவிக்காலங்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இவர்களின் ஊதியம் மாநில தலைமை தேர்தல் ஆணையர் எவ்வளவு பெறுகிறார்களோ அதே ஊதியம், படி பணம் இவர்களுக்கும் வழங்கப்படும். இவர்களின் முக்கியமான பணி பொது தகவல் அலுவலரை நியமித்தல், மக்களுக்கு ஆர் டி ஐ பற்றிய விழிப்புணர்வு கொண்டு வருதல், பொது தகவல் அலுவலர் முறையாக பணி செய்யாவிடில் அவரை கண்காணித்தல் போன்றவைகளாகும். மத்திய அரசு எந்த பணிகளை கடைப்பிடிக்கிறதோ அதே வேலையைத்தான் இந்த மாநில அரசும் செய்கிறது.

இந்தியாவின் ஆளுநர் யார் 2024

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முகவரி மற்றும் பெயர் 2024

முந்தைய ஆணையரின் பெயர் மாண்புமிகு திரு. ஆர். இராஜகோபால் ( இவர் நவம்பர் 2022 இல் ஓய்வு பெற்றுவிட்டார்) அவர்கள். தலைமை முகவரி எங்கு இருக்கிறது என்றால் கமர்சியல் டிபார்ட்மென்ட் ரோடு, நந்தனம் சென்னை 600 005 தான் உள்ளது. இதன் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 05.45 மணி வரை. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும்.

16 நிதி குழு தலைவர் 2024