16 நிதி குழு தலைவர் 2023

16 நிதி குழு தலைவர் 2023 - 16 வது நிதி குழு தலைவர் இந்த வருடம் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வருமென்று கூறலாம். இதுவரை மொத்தமாக 15 நிதி குழுக்களை நம் இந்திய நாடு அமைத்துள்ளது. இதனை முதன்முதலில் 1951 ஆம் ஆண்டு தான் தோற்றுவித்தனர். நடைமுறையில் 1952 ஆம் வருடம் முதல் நிதிக்குழு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வீதம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏற்கனவே இருந்த அதிகாரிகள், தலைவர்கள் இருந்தாலும் மறுபடியும் அவர்களை பணியில் அமர்த்த குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு.

16 நிதி குழு தலைவர் 2023


இதில் மொத்தம் தலைவரோடு சேர்த்து ஆறு பேர் வீதம் பணியில் அமர்த்தப்படுவார்கள். முதலில் தலைவர் ஒருவர், நான்கு உறுப்பினர்கள் மற்றும் ஒரு செயலாளர் என மொத்தமாக ஆறு பேர் வீதம் கொண்ட குழுவினை அமைப்பார்கள். இவர்களை இந்தியாவின் குடியரசுத்தலைவர் அவர்கள் தான் பணியில் அமர்த்துவார். இவர்களின் பணிக்காலத்தை கூட்டவும் குறைக்கவும் இவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

நிதி ஆயோக் என்றால் என்ன

பணிகள்

1. மாநில மற்றும் மத்திய அரசாங்களுக்கு இடையில் வரி வருவாய் பகிர்ந்தளிப்பு ஏற்படுத்துதல்.

2. மானியங்களை பகிர்ந்தளித்தல்.

3. மொத்தமாக சொன்னால் இரண்டு அரசாங்களும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை, செயல்களை தீர்மானித்தல்.

இந்திய நிதி அமைச்சர் பெயர் 2023

15 வது நிதி ஆணையம் பரிந்துரை

கடைசியாக 15 வது நிதிக்குழுவானது நவம்பர் மாதம் 27, 2017 இல் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் நிதி அறிக்கை நவம்பர் மாதம் 09 ஆம் தேதி 2020 வருடம் தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது 2020 லிருந்து 2025 வரையிலான வருடங்கள் வரையும் அறிக்கை செயல்படும். புதிதாக அல்லது அடுத்த நிதி குழுவானது இன்னும் ஒரு வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதி குழு தலைவர் 2023 யார் என்றால் திரு. என். பி. சிங்க் அவர்கள்.

பஞ்சாயத்து ராஜ் சட்டம்