மானாவாரி பயிர் வகைகள்

மானாவாரி பயிர் வகைகள் - மானாவாரி என்னும் சொல் வானாவாரியில் இருந்து வந்தது. வானவாரி என்னும் சொல்லில் வான என்பது வானம் அல்லது ஆகாயம் மற்றும் வாரி என்பது நீர். இதனை அடிப்படையாக கொண்டு தான் வானாவாரி என்னும் சொல் உருவானது. காலப்போக்கில் மானாவாரி என்னும் சொல் வந்து விட்டது.

மானாவாரி பயிர் வகைகள்


மானாவாரி என்றால் என்ன

இந்த மானாவாரி நிலம் என்பது எந்த வித பாசனமும் கிடைக்காமல் வானத்தில் நேரடியாக பெறப்படுகின்ற மழை நம்பி மட்டுமே விவசாயம் செய்யக்கூடிய நிலமாகும். வானம் பார்த்த பூமி என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது மழையினை மட்டும் நம்பி இருக்கும் நிலம் என்றால் அது மானாவாரி தான்.

மழை பெய்யும் சமயத்தில் அதற்கு ஏற்றவாறு விதைகளை நிலத்தில் இடுவர். பிறகு அது வளர்ந்த பிறகு விளைச்சல் செய்வர். இந்தியாவில் மட்டும் 55 சதவீத நிலம் இந்த நிலமாக தான் இருக்கின்றது.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: நவதானியங்கள் பெயர்கள்

விளைகின்ற தானியங்கள் மற்றும் பயிர்கள்

1. சாமை

2. தினை

3. வரகு

4. குதிரைவாலி

5. கம்பு

6. சோளம்

7. பருத்தி

8. ஆமணக்கு

குறிப்பு

மேற்கண்ட தானியங்கள் மற்றும் பயிர்கள் மட்டும் தான் மானாவாரி நிலங்களில் விளையக்கூடியது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது எடுத்துக்காட்டுக்கு மட்டுமே.

இதையும் படியுங்க: சிறுதானியங்கள் பெயர்கள்