மாட்டு கொட்டகை அமைக்க வாஸ்து - மாட்டு கொட்டகை அமைத்தல் மற்றும் அதற்குண்டான செலவுகளை தற்போது அரசாங்கம் மானியமாக வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 1,00, 000 முதல் 1, 50, 000 வரை அரசாங்கம் மாட்டு தொழுவம் அமைக்க மானியமாக கொடுக்கிறது. இதனால் மாட்டினை நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு நன்மையே. இருந்தபோதிலும் முதலில் மாட்டு கொட்டாய் அமைத்த பின்னர் தான் பணம் வழங்கப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் உள்ளே அதாவது வீட்டினை சுற்றி தான் மாட்டிருக்கான தொழுவம் அமைக்க வேண்டும். வீட்டினை கொஞ்சம் கூட தொடாமல் கட்டுதல் அவசியம்.
மாட்டு தொழுவம் வாஸ்து
1. வடமேற்கு பகுதியில் கிழக்கு பார்த்தார் போல் இருக்க வேண்டும்.
2. ஒருவேளை வடமேற்கு பகுதியில் இடம் பற்றாக்குறை என்றால் தென்கிழக்கு பகுதியை யூஸ் செய்யலாம். ஆனால் தென்கிழக்கை விட வடமேற்கு பகுதி சிறப்பானது.
3. வடக்கும் மேற்கும் சரியாக இணையும் இடத்தில் தொழுவம் ஆரம்பித்தால் நல்லது.
4. தொழுவம் அமைக்கும்போது இருபுறமும் இடைவெளி கண்டிப்பாக அவசியம்.
5. மாடு எந்த திசையில் கட்ட வேண்டும் என்றால் வடக்கு, கிழக்கு பார்த்தாற்போல் போல் கட்டினால் நன்மை.
ஆடு மாடு கொட்டகை விண்ணப்பம் Pdf