மாத வட்டி கணக்கு - இன்றைய சூழ்நிலையில் 99 சதவீத மக்கள் அனைவருமே கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஏனெனில் குடும்பம், வியாபாரம், ஏற்கனவே கடன் கொடுக்க முடியாமல் அந்த கடனை அடைப்பதற்கு வாங்குவது, திருமணம் மற்றும் படிப்பு செலவு இவைகளுக்காக பெரும்பாலும் மக்கள் கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. யாரும் வேண்டுமென்றே கடனாளி ஆவதில்லை. அப்படி இருக்கும் நேரத்தில் கடன் வட்டி பற்றி யோசிப்பதில்லை அல்லது அச்சமயம் வாங்கினால் போதுமென்று நினைத்து வாங்கும்போது அவர்களால் அந்த வட்டி கட்ட முடியாமலும் தள்ளப்படுகிறார்கள்.
முதலில் வட்டிக்கு பணம் வாங்கும்போது எத்தனை மாதம் எவ்வளவு வட்டி ஆகிறது என்பதனை சரியாக கேட்டு கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த 100 க்கு 02 ரூபாய் வட்டி வீதம் யாரும் பின்பற்றுவதில்லை. மாறாக 3, 5, 7 அல்லது 10 வட்டி வீதம் என கடன் தருகிறார்கள்.
வட்டி கணக்கு பார்ப்பது எப்படி
1. வாங்கிய தொகை - 60, 000
2. வட்டி - 2 ரூபாய்
3. காலம் - 02 வருடம்
மேற்குறிப்பிட்ட 60, 000 யை 100 ஆல் வகுத்து வரும் விடையை வட்டி 02 யை பெருக்கி மீண்டும் வருடம் 02 ( 24 மாதங்கள் ) ஆல் பெருக்கினால் வரும் விடை நீங்கள் மொத்தமாக செலுத்த வேண்டிய வட்டிகளின் தொகையாகும்.
தபால் அலுவலக எஃப்டி வட்டி விகிதம் 2022
வட்டி கணக்கு போடுவது எப்படி
1. 100 க்கு வட்டி என்றால் தொகையை 100 ஆல் வகுக்க வேண்டும் ( 60, 000 /100 = 600 )
2. வருகின்ற விடையை கொண்டு எவ்வளவு வட்டியோ அதனை கொண்டு பெருக்க வேண்டும். இங்கே மாத வட்டி ( 600 x 2 = 1200 )
3. இரண்டு வருடம் என்றால் 24 மாதங்கள் ( 1200 x 24 = 28, 800 ).
குறிப்பு
வங்கிகளில் ஒரு சில நேரத்தில் % கணக்கில் வட்டி கணக்கிடப்படும். அதுவும் இதுவும் வெவ்வேறு.
பைசா வட்டி கணக்கு
வட்டிகள் ஒரு சில சமயத்தில் விவசாயிகளுக்கு பைசா கணக்கில் கொடுப்பார்கள். உதாரணமாக 1 பைசா வட்டி அல்லது 2 பைசா வட்டி என தருவார்கள். பைசா கணக்கில் உங்கள் வட்டி பணம் இருந்தால் 1 பைசாவை 0.01 என்றும் 2 பைசாவாக இருந்தால் 0.02 என்றும் 10 பைசாவாக இருந்தால் 0.10 என்றும் பெருக்கி கொள்ள வேண்டும்.
மாதாந்திர சேமிப்பு திட்டம்