மாத சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை

மாத சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை ( matha sashti viratham irukum murai ) - சஷ்டி விரதங்கள் எப்போதும் மாதத்திற்கு இரண்டு முறை வீதம் வருகின்றன. இந்த ஷஷ்டி திதியானது கார்த்திகை மாதங்களில் வரும்போது அன்றைய தினம் மிகவும் விசேஷகமாக இருக்கும். மாத மாதம் வருகின்ற சஷ்டி திதிகளிலும் நாம் அருள்மிகு முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்வதால் நமக்கு மிகவும் நன்மை வரும் என்பது நம்பிக்கை.

இரண்டு பிறைகளிலும் நீங்கள் வழிபடலாம் அல்லது விரதங்கள் இருக்கலாம். பிரச்சனைகள் தேய்ந்து போக வேண்டுமென்றால் தேய்பிறை சஸ்டியிலும் சுப விசேஷங்கள் வளர வேண்டும் என்றால் வளர்பிறை சஸ்டியிலும் நாம் விரதம் இருக்கலாம்.

மாத சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை


பலன்கள்

வறுமை நீங்க

கொடிய நோய் குணமாக

பிள்ளைப்பேறு கிடைக்க

மாத சஷ்டி விரதம் இருக்கும் முறை

காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் முருகப்பெருமான் திருவுருவப்படத்திற்கு முன்னால் காய்ச்சிய பால், வெற்றிலைப்பாக்கு மற்றும் வாழைப்பழங்கள் இவைகள் எல்லாம் வைத்து விரதங்களை துவங்கி மாலை வேளையில் முடிக்க வேண்டும். மூன்று வேளைகளிலும் உபவாசம் இருந்தால் நன்மையே.

விரதம் இருக்கும் போது தூங்கலாமா