கும்ப ராசி சதய நட்சத்திரம் 2023 எப்படி இருக்கும் - ராசிகளில் 11 வது ராசியாக கும்பம் இருக்கின்றது. சனி பகவானின் ராசியாக இந்த ராசிக்காரர்கள் இருப்பதால் சனி பகவானால் உண்டாகுகின்ற ஏழரை சனி மற்றும் சனி பிரச்சனைகள் கொஞ்சம் குறைவாக காணப்படும். இந்த ராசியினருக்கு மொத்தம் மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளனர். அவைகள் அவிட்டம், சதயம் மட்டும் பூரட்டாதி ஆகும்.
இதில் இரண்டாவதாக உள்ள நட்சத்திரம் சதயம் நட்சத்திரங்கள் கொண்டவர்கள் ஆவர். நான்கு பாத நட்சத்திர பாதங்களை இந்த கும்ப ராசியினர் பெற்று கொண்டுள்ளது கூடுதல் பலம்.
சற்று முன்னர்: பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது
இந்த சதயம் நட்சத்திரத்தினை கொண்டவர்கள் அருள்மிகு ராகு பகவானை அதிபதியாக கொண்டவர்கள் ஆவர். இந்த வருடத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சியில் நடப்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். அதில் குரு பகவானால் கோடீஸ்வர யோகம் உங்களுக்கு வரலாம். இந்த வருடத்தில் வருமானம் உங்களுக்கு உயரும். அதே சமயத்தில் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு மேலாக உள்ள பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது. பத்திரம் மற்றும் நிலம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போகும். அரசு வேலைக்கு படிப்பவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் இந்த வருடம் உங்களுக்கானது தான்.
இதையும் படியுங்க: பல்லி விழும் பலன்