கிராம சபை கூட்டம் 2024 ( 22.03.2024 )

கிராம சபை கூட்டம் 2024 ( மார்ச் 22 ) - கிராம சபை சட்டம் என்பது மக்கள் தீர்மானிக்கும் செயல் அல்லது ஊரக வளர்ச்சிக்காக திட்டமிடுதல் மற்றும் கிராம மக்களின் அதிகாரம் ஆகும். இந்த கிராம சபை நடைபெறும் நாட்கள் ஆக பார்த்தால் வருடத்திற்கு நான்கு முறை வரும். அதன் தேதிகள் பின்வருமாறு.

கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள் 2024

ஜனவரி 26, மார்ச் 22, மே 01, ஆகஸ்ட் 15,  அக்டோபர் 02 மற்றும் நவம்பர் 01. இந்த தேதிகளில் தான் கிராமங்களில் சபைகளை கூட்டுவார்கள். இதனை ஊராட்சி மன்ற தலைவர்கள் தான் ஒவ்வொரு ஊரிலும் கூட்டுவார்கள். இந்த கூட்டத்தில் வெளிப்படைத்தன்மை, வளர்ச்சி திட்டத்திற்கு மேம்படுத்தல் போன்ற விஷயங்களை பேசலாம் மற்றும் கிராம சபை வரவு செலவு பற்றியும் பேசலாம்.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அரசு அதிகாரிகள்

அப்டேட் ஜனவரி 26, 2024

இந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதியில் கிராம சபை கூட்டங்கள் அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மக்களும் கிராம சபை கூட்டத்தில் கேள்விகளை எழுப்பினார்கள்.

ஒரு சிறிய ஊரில் 500 பேர் கொண்ட மக்கள் தொகை இருக்கிறது என்றால் அங்கு ஐம்பது பேர் கொண்ட மக்களாவது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதே ஒரு பெரிய ஊரில் 10000 பேர் கொண்ட மக்கள் தொகை இருக்கிறது என்றால் குறைந்து 300 பேராவது அதில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு குறைவாக இருந்தும் அங்கு ஏதாவது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அது சட்டப்படி செல்லாது. ஒருவேளை அதிகமான ஆட்கள் வராத நிலையில் அதனை இன்னொரு நாளுக்கு தள்ளி வைக்க முடியும். அப்படி தள்ளி வைக்கும் தேதி மற்றும் பெர்மிஸ்ஸின் எல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் ஊர் மக்கள் சேர்ந்து மனு கொடுத்தால் அவர்கள் நிறைவேற்றுவார்கள்.

கிராம சபை கூட்டம் 2024


கிராம சபை கூட்டத்தில் கேட்க வேண்டிய கேள்விகள்

எதற்காக இந்த கிராம சபை கூட்டம் என்றால் மக்கள் அந்த ஊரில் என்னென்ன நன்மைகள் செய்யலாம் அல்லது தீர்மானங்களை நிறைவேற்றலாம் மற்றும் அதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்விகள் எழுப்பலாம். இதில் யாருமே குறுக்கிட முடியாது. அதனால் மக்கள் எந்த வித தயக்கமும் இன்றி அவர்கள் கேள்விகளை எழுப்பலாம். உதாரணமான தண்ணீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, மின்சாரம் பிரச்சனை மற்றும் பொது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் சொல்லலாம்.

கிராம சபை மனு

இதனை தான் தீர்மானம் என்று சொல்லுவார்கள். இந்த தீர்மானங்களை உங்கள் ஊராட்சியின் தலைவர் அவர்கள் சேர்ந்து மாவட்ட கலெக்டர் இடம் கொடுத்தால் அவர் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுப்பார். இந்த தீர்மானங்கள் சட்டமன்றத்தில் கூறும் தீர்மானத்திற்கு சமமாகும்.

பட்டா சிட்டா