கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2025 ( Kalaignar veedu thittam 2025 online apply ) - இலவச வீடு திட்டத்தினை மத்திய, மாநில என இரண்டு அரசாங்கமும் செயல்படுத்தி வருகின்றது. ஏற்கனவே மத்திய அரசு மார்ச் 31 தேதி தான் புதிய வீடு விண்ணப்பிக்க அல்லது பெற கடைசி நாள் என அறிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு தனது முடிவை மாற்றி கொண்டு இந்த வருடம் அதாவது டிசம்பர் 31, 2022 வரையும் ஏழை எளிய மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் என அனைத்து தர மக்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டு இருந்தது. மாநில அரசும் அதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் ஆணை வெளியிடுகிறது.
பயனாளிகள் இரண்டு மானியங்களை அப்ளை செய்ய முடியாது. குடிசை மற்றும் வீடு இல்லாத மக்களுக்கே இது போன்ற சலுகைகள் வழங்கப்படும். ஆனால் சமீப காலமாக வீடு இருக்கின்ற மக்களும் இலவச வீட்டிற்கு அப்ளை செய்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அரசாங்கம் இந்த முறை தகுதி இல்லாத நபர்கள், போலியான நபர்கள் மற்றும் ஏற்கனவே கான்கிரீட் வீடு உள்ளவர்கள் என தெரியவந்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தமிழக அரசின் இலவச திட்டங்கள் 2024
தற்போது நடைமுறையில் திருச்சிராப்பள்ளி, ஈரோடு, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மறு கணக்கீடு கிராம பஞ்சாயத்து மூலம் நடந்து வருகிறது. இதனை அந்தந்த ஊர்களின் கிராம நிர்வாக அலுவலர், ஊர் பஞ்சாயத்து தலைவர், பிரதிநிதி, உதவியாளர்கள் ஆகியோர்கள் இந்த கணக்கீடு செய்வார்கள். இந்த கணக்கீடு வீட்டு வரி அடிப்படையில் நடைபெறுகிறது. இதனை கணக்கீடு செய்ய உங்கள் வீடு தேடியே வருவார்கள். அப்போது உங்கள் பட்டா, பத்திரம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை எடுத்து கொள்தல் அவசியம். மேற்கூறிய ஆவணங்கள் எல்லாம் ஒரே பெயரிலும் முக்கியமாக அது பெண்கள் பெயரில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வீடு கட்ட அரசு மானியம் பெறுவது எப்படி
ஒருவேளை நீங்கள் தகுதி பெரும் ஆளாக இருந்தும் உங்களிடம் கணக்கீடு செய்ய வரவில்லை என்றால் உடனடியாக உங்கள் ஊர் கிராம பஞ்சாயத்தில் சரியான ஆவணங்களை கொடுத்தால் வேலை ஆகும். அவர்களும் உங்களுக்கு எந்த வித முன்னரிமை வழங்காத நேரத்தில் வட்டாச்சியர் வளர்ச்சி துறை அலுவலகத்தில் கொடுக்கலாம்.