ஜமாபந்தி என்றால் என்ன

ஜமாபந்தி என்றால் என்ன - சமபந்தி என்னும் சொல்லும் ஜமாபந்தி என்னும் சொல்லும் ஒன்றே தான். இதனை வருவாய் தீர்வாயம் என்றும் நாம் அழைக்கலாம். ஒவ்வொரு பசலி ஆண்டில் கிராம கணக்குகளை சப்மிட் செய்யும் தினமே அல்லது அந்த மாதத்தில் நடக்கும் கூட்டமே ஜமாபந்தி ஆகும். இது வருடத்தில் மே அல்லது ஜூன் மாதங்களில் வட்டாட்சியர் அலுவலகம் எனப்படும் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும். இது அந்தந்த வருவாய் கிராமங்களில் உள்ள கிராமம் நிர்வாக அலுவலர் தான் நடத்த ஏற்பாடு செய்வார். இதன் நோக்கமே மக்கள் குறைதீர் திட்டத்தினை செயல்படுத்துவதே ஆகும்.

ஜமாபந்தி என்றால் என்ன


ஜமாபந்தி 2023 மனு ஸ்டேட்டஸ் விண்ணப்பம்

நேரடியாகவும் அல்லது ஆன்லைன் வாயிலாகவும் Gdp இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். என்னதான் மற்ற தினங்களில் அல்லது மற்ற அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்த பின்னர் ஏதும் நிறைவேறவில்லை என்றால் இந்த கூட்டம் மக்களுக்கு உபயோகப்படும். ஏனெனில் இந்த கூட்டத்தின் நோக்கமே ஏற்கனவே நிறைவேறாத மனுக்கள் இந்த கூட்டத்தின் மூலம் நிறைவேற்றுவது ஆகும். இந்த கூட்டத்தில் அனைத்து வருவாய் அதிகாரிகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள காரணத்தினால் நாம் நம்முடைய மனுக்களை தாராளமாக கொடுக்கலாம். நிச்சயமாக வி ஏ ஓ, ஆர் ஐ மற்றும் வட்டாட்சியர் இவர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கு மேலே உள்ள அதிகாரிகளும் வர வாய்ப்பிருக்கிறது.

பசலி ஆண்டு என்றால் என்ன

ஜமாபந்தி மனு எழுதுவது எப்படி

1. எப்படி மற்ற பெட்டிசன்களை நாம் எழுதி தருவோமோ அதேபோல் தான் இந்த மனுவும் எழுத வேண்டும்.

2. ஏற்கனேவே மனுக்கள் கொடுத்திருந்தாலும் இங்கே தரலாம்.

3. பட்டா, சிட்டா, அடங்கல், கல்வி, குடிநீர், தூய்மை, முதியோர் உதவித்தொகை மற்றும் இதர விஷயங்கள் எதுவாக இருந்தாலும் கொடுக்கலாம்.

4. முடிந்தவரையில் சீக்கிரமாகவே உங்கள் மனுக்கள் ஏற்கப்பட்டு கோரிக்கை நிறைவேற்றப்படும்.

பிராது என்றால் என்ன