இரவில் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா

இரவில் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா - முதலில் எண்ணெய் நாம் ஏன் தலையில் வைக்க வேண்டும் என்று நமக்குள் கேட்டே ஆக வேண்டும். தலை முதல் கால் வரையும் மனிதனின் செயல்பாடுகள் இயங்குகின்றன. இதில் தலை தான் முதலில் இருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் நாம் கொடுத்தே ஆக வேண்டும்.

இரவில் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா


எண்ணெய் வைப்பதனால் நம் தலையில் உள்ள ஹீட் குறைகின்றது. அது உடல் முழுவதும் உள்ள சூட்டினை தணிக்கின்றது. இதனால் எண்ணெய் வைப்பது நல்லது. ஆனால் எப்போது வைக்க வேண்டும் எந்த நேரத்தில் வைக்க வேண்டுமென்று கட்டாயம் நாம் தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்து வைத்தால் தான் நமது முடிக்கு பாதுகாப்பு கிடைக்கும். இல்லையென்றால் அதும் கிடைக்காது.

இதையும் படிக்க: ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை

குளிப்பதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னர் தான் வைக்க வேண்டும். முழு நேரமும் அல்லது இரவு வைப்பது அறவே கூடாது. இது ஒரு சிலருக்கு சரியாக இருந்தாலும் பெரும்பாலோனருக்கு பலனை தருவதில்லை. ஆதலால் இரவில் எண்ணெய் வைத்தால் கிட்டத்தட்ட 10 மணி நேரம் நமது தலையிலேயே எண்ணெய் தங்கி விடும். இதனால் முடி கொட்டுவதற்கு வாய்ப்பு அதிகமாகின்றது.