இன்று சந்திர தரிசனம் எத்தனை மணிக்கு நேரம் 2024 July ( santhira dharisanam 2024 tamil ) - மாதத்தில் ஏகப்பட்ட விரதங்களை மனிதர்களாகிய நாம் கடைப்பிடிக்கிறோம். அந்த வகையில் சந்திர தரிசனம் அன்று விரதம் மேற்கொண்டால் அவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதே உண்மை. அமாவாசை கழிந்து மூன்று நாட்களில் வருவதுதான் இது. அமாவாசைக்கு பிறகு அடுத்த நாளும் நிலவானது நம் கண்ணிற்கு புலப்படாது. ஆனால் மூன்றாம் நாளன்று நம் கண்ணுக்கு விருந்தாக சந்திர பகவான் அவர்கள் நமக்கு அருள் புரிகிறார். அன்றைய தினத்தை தான் நாம் மூன்றாம் பிறை என்கிறோம்.
இதனை மாதந்தோறும் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் வருகின்ற துவிதியை திதியில் இந்த தரிசனங்கள் வருகின்றன.
சந்திர தரிசனம் பலன்கள்
குறிப்பாக சந்திர தோஷம் உள்ளவர்கள், மன பிரச்சனைகள் அனைத்தும் தீர இந்த நாளினை நாம் தரிசிக்கிலாம். மேலும் ஆயுள் அதிகரிக்கவும் இந்த நாளில் நாம் வேண்டலாம்.
வீட்டில் விசேஷம் நடப்பது போல் கனவு கண்டால்
சந்திர தரிசனம் செய்வது எப்படி
வீட்டில் உள்ள ஒரு பெரிய சுத்தமான தட்டு எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பச்சரிசி மற்றும் காமாட்சியம்மன் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் திரி ஏற்றி கொண்டு மேற்கு திசையில் வைக்கவும். மாலை 06.30 முதல் 07.00 வரையும் சந்திர தரிசனங்கள் நம் கண்ணுக்கு புலப்படும். அந்த நேரத்தில் நீங்கள் வணங்கலாம்.
வடக்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை
இன்று எத்தனையாவது பிறை 2024
அமாவாசைக்கு பிறகு வருகின்ற முதல் நாள் முதல் பிறை என்று அழைக்கப்படும். இதேபோல் ஒவ்வொரு அடுத்த நாளும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பிறைகள் என்று நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பல்லி விழும் பலன்