வடக்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை

வடக்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை - நாம் அன்றாடம் சேர்த்து வைக்கும் பணம், நகை மற்றும் பத்திரம் போன்றவைகளை பாதுகாப்பாக இருக்க பீரோவில் வைப்போம். அத்தகைய பீரோவை முறைப்படி வைத்தால் மட்டுமே நமது செலவுகளும் குறையும். அதே சமயத்தில் பணமும் பெருகும் என்று சொல்கிறது வாஸ்து சாஸ்திரம்.

பொதுவாகவே இப்போதும் திசைகளில் ஒரு சிலருக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது என்றே சொல்லலாம். சூரியன் உதிக்கின்ற திசை கிழக்கு மற்றும் மறைகின்ற திசை மேற்கு ஆகும். இதனை வைத்து உங்கள் வீடு எந்த திசையில் உள்ளது என தீர்மானித்து கொள்ளுங்கள்.

வடக்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை


எந்த வீடாக இருந்தாலும் சரி நிச்சயமாக நிருதி அல்லது குபேர மூலை எனப்படும் தென்மேற்கு பகுதிகளில் மட்டுமே வைக்க வேண்டும். அப்போது தான் செலவுகளும் குறையும் மற்றும் பணமும் பெருகும்.

பீரோவை வைக்க தென்மேற்கு பகுதியை உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஆனால் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது சிலருக்கு சந்தேகம் வேண்டாம். தெற்கும் மேற்கும் ஒன்றாக இணைகின்ற இடத்தில் பீரோவை வைக்கலாம். பீரோ வடக்கு நோக்கி பார்த்தவாறு அமைக்கலாம். அப்படி வடக்கு திசையில் அமைய இடம் இல்லாவிட்டால் கிழக்கு திசை நோக்கி வைக்கலாம்.

பீரோ வைக்கும் திசை 2023