ஈஸ்மெண்ட் பாத்தியம் என்றால் என்ன

ஈஸ்மெண்ட் பாத்தியம் என்றால் என்ன ( Easement act 1882 in tamil and right meaning in tamil pdf tamilnadu ) - வழக்கமான பாதை மற்றும் தனிநபர் பாதை என இரண்டு உள்ளது. வழக்கமான பாதை என்பது பொது பாதை ஆகும். இந்த இடத்தில் பொது மக்கள் அனைவரும் செல்லலாம். வண்டி, வாகனம், நடந்து செல்ல இந்த பாதையினை உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஆனால் தனிநபர் பாதை என்பது ஒரு நில உரிமையாளர் இடம் ஆகும்.

ஈஸ்மெண்ட் பாத்தியம் என்றால் என்ன


எடுத்துக்காட்டு

ஒருவர் நிலம் வாங்கி உள்ளார் என வைத்துக்கொள்வோம். மொத்தமாக மூன்று நிலம் உள்ளது. அதில் இரண்டாம் நிலத்தினை இவர் வாங்கியுள்ளார். இந்த மத்தியில் உள்ள நிலத்திற்கு வர ஒன்று முதல் நிலத்தினையோ அல்லது மூன்றாம் நிலத்தினையோ கடந்து தான் வர வேண்டும். வேறு எந்த வழிகளும் இல்லை. இன்னொரு நிலத்துக்காரர் வழி விட அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வது ?

பட்டா நிலம் என்றாலும் வழி விட்டு தான் ஆக வேண்டும். ஆனால் உங்கள் நிலத்திற்கு கடந்து செல்ல வேறு வழி இல்லையென்றால் மட்டுமே பட்டா நிலத்தில் வழி விட வேண்டும். வசதி உரிமை சட்டம் 1882 இன் படி நீங்கள் உரிமையியல் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: ஈசி வில்லங்க சான்றிதழ்