இ சேவை மையம் வாரிசு சான்றிதழ் ( Portal 2 )

இ சேவை மையம் வாரிசு சான்றிதழ் ( E sevai maiyam legal heir certificate ) - இ சேவை மையங்கள் தற்போது அனைத்து நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வந்து விட்டன. இதனால் மக்கள் எவ்வித கஷ்டமும் இன்றி அரசு சேவைகளை பயன்படுத்தி கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சான்றிதழ்கள் அல்லது சேவைகளை மட்டும் தான் முன்னர் எல்லாம் கிடைத்திருந்தது. ஆனால் இப்போது முக்கால் பாக சேவைகளை நாம் இ சேவை மையம் மூலம் பெற்று கொள்ளலாம்.

இ சேவை மையம் வாரிசு சான்றிதழ்


24 துறைகளில் உள்ள 92 சேவைகளை நாம் இ சேவை மையம் மூலம் எடுத்து கொள்ள முடியும். இதில் 29 சேவைகளை வருவாய்த்துறை வழங்குகிறது. இதில் குறைந்தபட்ச கட்டணமாக 60 ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 500 ரூபாய் பெறப்படுகிறது.

இதையும் பார்க்க: இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன

இதில் Rev 114 என்பது வாரிசு சான்றிதழை குறிக்கும். இதற்கு முதலில் Tnesevai ரெஜிஸ்டர் செய்திருத்தல் அவசியமாகும். பதிவு செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. பதிவு செய்யும்போதே சரியான தகவல்கள் கொடுக்க வேண்டும். பதிவு செய்த பின்னர் நீங்கள் 92 சேவைகளில் எது விருப்பமோ அதனை விண்ணப்பித்து பெற்று கொள்ள முடியும். சந்தேகங்கள் இருப்பின் அருகில் உள்ள இ சேவை மையம் அணுகவும்.

இதையும் பார்க்க: ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி