இ சேவை மையம் பயன்கள்

இ சேவை மையம் பயன்கள் - தமிழ்நாடு அரசாங்கம் கொடுத்த ஒரு முக்கியமான அரசாணைகளுள் இ சேவை மையம் ஒரு முக்கியமான பங்கினை தற்போது பிடித்துள்ளது. 2000 மற்றும் 2010 கால கட்டங்களிலும் சரி அல்லது அதற்கு முன்னர் இருந்த கால கட்டங்களிலும் சரி ஏதாவது அரசு சார்ந்த நகல்கள், ஒரிஜினல் பெற அவ்வளவு சிரமப்படி வேண்டி இருக்கும். ஆனால் 2022 ஆம் ஆண்டு டிஜிட்டல் ஆகிய பிறகு எந்த ஒரு ஆவணமும் எளிதாக அளித்திட அரசாங்கம் மக்களுக்கு அள்ளி கொடுக்கிறது.

இ சேவை மையம் பயன்கள்


ஆதார் முதல் பட்டா வரையிலான அனைத்து சான்றிதழ்களும் பெற நாம் ரூபாய் 60 கட்டினாலே போதுமானது. தற்போது நகராட்சிகளில் மட்டுமல்லாது பேரூராட்சிகள் மற்றும் கிராம புறங்களிலும் இ சேவை மையங்கள் இருக்கிறது. இதனால் மக்கள் அதிகபட்சமாக ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் தூரம் வரையும் மட்டுமே செல்கிறார்கள். அதுமட்டுமல்லாது வரிசையில்லாமலும், குறைந்த கட்டணமும், குறைவான நேரமும், அலைச்சலும் மற்றும் எளிமையான ரெஸ்பான்ஸ் இவைகள் இங்கேயே கிடைத்து விடுகிறது.

இதில் வருவாய் துறையில் தான் அதிகமாக சான்றிதழ்கள் தமிழக அரசாங்கம் வழங்கி வருகிறது. 23 வகையான சான்றிதழ்கள் தற்போது வரையும் வழக்கிட்டு வருகிறார்கள். மொத்தமாக 194 வகையான சான்றிதல்களை பொது இ சேவை மையம் வழியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

வேலை நாட்கள்

1. திங்கள் முதல் சனிக்கிழமை ( 09.00 ஏ எம்  - 06.00 பி எம்) ( ஒவ்வொரு மையத்திற்கும் வேறுபடலாம் ).

2. அரசு பொது விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை.

மாவட்ட வருவாய் அலுவலர் பணிகள்