கலெக்டர் பணிகள் அதிகாரம் - மாவட்ட ஆட்சியர் எனப்படும் கலெக்டர் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம். கலெக்டர் என்பவர் ஒரு மாவட்டத்தின் நிர்வாக அதிகாரி எனலாம். என்னதான் வருவாய்த்துறை பணிகள் அதிகமிருந்தாலும் ஏனைய துறைகளையும் மேற்பார்வையிடுதல் இவருக்கு கூடுதல் பணியாகும்.
1. ஊரடங்கு எனப்படும் 144 யை இவர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
2. நில கையகப்படுத்துதல்.
3. நில உச்சவரம்பு நிலங்களை கணக்கீடு செய்தல்.
4. பேரிடர் காலத்தில் நிவாரண பொருட்களை வழங்குதல்.
5. ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் ஒரு தகவல் பாலமாக செயல்படுதல்.
6. மாவட்ட ஊரக திட்ட அலுவலராக செயல்படுகிறார்.
7. இவருக்கு கீழ் பணிபுரியக்கூடிய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் இவர்களுக்கு ஆலோசனை மற்றும் பணி கொடுப்பது.
8. நில கோப்புகள் மற்றும் ஆவணங்களை சேகரித்தல்.