சித்திரை மாதம் கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாள் 2025 - சித்திரை மாதம் தான் தமிழ் வருடங்களில் முதல் மாதமாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் இடையில் இந்த சித்திரையானது பிறக்கின்றது. 99 சதவீதம் ஏப்ரல் 14 தேதியன்று இந்த சித்திரை பிறக்கும்.
கிரகப்பிரவேசம் என்றால் ஒரு வீட்டினை கட்டி முதன்முதலில் வீட்டில் உள்ள அனைவரும் செல்ல உகந்த நாளாக இது இருக்கும். அந்த நன்னாளில் தான் நாம் வீட்டிற்குள் குடி பெயர வேண்டும்.
1. சித்திரை 03
2. சித்திரை 05
3. சித்திரை 10
1. சித்திரை 03
ஏப்ரல் மாதம் 16 ஆம் நாளில் புதன் கிழமையில் தேய்பிறை திருதியை திதியில் அனுஷம் நட்சத்திரத்தில் காலை 04 முதல் காலை 06 மணிக்குள் செல்ல வேண்டும். மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திரக்கார்களுக்கு இது உகந்தது.
2. சித்திரை 05
ஏப்ரல் மாதம் 18 ஆம் நாளில் வெள்ளிக்கிழமையில் தேய்ப்பிறையில் பஞ்சமி திதியில் மூலம் நட்சத்திரத்தில் காலை 06 முதல் 08 மணிக்கு செல்ல வேண்டும். உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களுக்கு உகந்த நாளாக இது அமையும்.
3. சித்திரை 10
ஏப்ரல் மாதம் 23 ஆம் நாளில் புதன் கிழமையில் தேய்ப்பிறை தசமி திதியில் அவிட்டம் நட்சத்திரத்தில் காலை 04 முதல் 06 மணிக்கு செல்ல வேண்டும். பரணி, பூராடம், ரோகினி, அஸ்தம், திருவோணம், சதயம், சுவாதி, பூரட்டாதி, கேட்டை, ரேவதி.