சென்னை மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் பட்டியல்

சென்னை மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் பட்டியல் ( chennai corporation zones and wards list ) - இந்தியாவின் மிகப்பெரிய நகரம், பெரிய நகராட்சி என பெயர் கொண்டது இந்த சென்னை மாநகராட்சி. உலகத்தில் இரண்டாவதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னையை சுற்றி கிட்டத்தட்ட 15 மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் அதனை சுற்றி 200 வார்டுகளாக பிரித்து உள்ளனர். 2011 ஆம் ஆண்டு முன்னர் வரையும் 155 வார்டுகள் மற்றும் 10 மண்டலங்கள் மட்டுமே இருந்தது. நாளடைவில் மக்கள்தொகை, தொகுதி மேம்பாடு மற்றும் இதர காரணங்களுக்காக வார்டுகள் மற்றும் மண்டலங்கள் அதிகமாகப்பட்டன.

சென்னை மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் பட்டியல்


காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் இருபத்தைந்து கிராம ஊராட்சிகள் போன்ற அனைத்தும் மிகப்பெரிய மாநகரமான சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டலங்கள், தொகுதிகள் மற்றும் வார்டுகள், வட்டங்கள் அதிகமாக உள்ளன.

தமிழக சட்டமன்ற தொகுதி சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வார்டு பட்டியல் வெளியீடு

1. திருவொற்றியூர் - ஒன்று முதல் பதினான்கு வார்டுகள் வரையும்

2. மணலி - பதினைந்து முதல் இருபத்தி ஒன்று

3. மாதவரம் - இருபத்தி இரண்டு முதல் முப்பத்தி மூன்று

4. தண்டயார்பேட்டை - முப்பத்தி நான்கு முதல் நாற்பத்தி எட்டு

5. ராயபுரம் - நாற்பத்தி ஒன்பது முதல் அறுபத்தி மூன்று

6. திரு. வி. க. நகர் - அறுபத்தி நான்கு முதல் எழுபத்தி எட்டு

7. அம்பத்தூர் - எழுபத்தி ஒன்பது முதல் தொண்ணுற்று மூன்று

8. அண்ணா நகர் - தொண்ணுற்று நான்கு முதல் நூற்றி எட்டு

9. தேனாம்பேட்டை - நூற்றி ஒன்பது முதல் நூற்றி இருபத்தி ஆறு

10. கோடம்பாக்கம் - நூற்றி இருபத்தி ஏழு முதல் நூற்றி நாற்பத்தி இரண்டு

11. வளசரவாக்கம் - நூற்றி நாற்பத்தி மூன்று முதல் நூற்றி ஐம்பத்தி ஐந்து

12. ஆலந்தூர் - நூற்றி ஐம்பத்தி ஆறு முதல் நூற்றி அறுபத்தி ஏழு

13. அடையார் - நூற்றி எழுபது முதல் நூற்றி எண்பத்தி இரண்டு

14. பெருங்குடி - 168, 169, 183 முதல் 191

15. சோழிங்கநல்லூர் - 192 முதல் 200.

இதில் மண்டலங்கள் 15 உள்ளன. மேலும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 23 மண்டலங்கள் என மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 2022 வருட இறுதிக்குள் 23 மண்டலங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு மக்களவை தொகுதி எண்ணிக்கை