செக்குபந்தி என்றால் என்ன ( Chekkupanthi enral enna ) - இதனை English இல் Check Boundary என்றும் அழைக்கலாம் அல்லது நான்கு மால் என்றும் அழைக்கலாம். 90 சதவீத பதிவு செய்கின்ற பத்திரங்களில் நிச்சயம் செக்குபந்தி என்கிற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஏனெனில் ஒரு பத்திரத்தில் சொத்தின் விவரம் இருந்தாலும் அதன் புல எண் ரீ சர்வே செய்யும்போது மறுபடியும் மற்றொரு புல எண் கொடுப்பார்கள். ஆனால் செக்குபந்தி பற்றி ஒரு சொத்து பத்திரத்தில் எழுதினால் அந்த இடம் தற்போது எங்குள்ளது என்று புல எண், அடங்கல் இல்லாமலேயே பார்த்து கொள்ள முடியும்.
செக்குபந்தி என்பது நிலத்தின் திசையை குறிக்கும். ஒரு நிலம் என்றால் அதற்கு நான்கு திசைகள் இருக்கும். அந்த நான்கு திசைகளில் பக்கத்தில் என்னென்ன இருக்கிறது என்பதை இந்த செக்குபந்தியில் எழுதி விடுவார்கள். இதனால் உங்களுடைய நிலம் சரியாக எங்கு இருக்கிறது என்பதை பார்க்க முடியும்.
இதையும் பார்க்க: ஜமாபந்தி என்றால் என்ன
எடுத்துக்காட்டு
உங்கள் நிலத்தின் சர்வே எண் 112/3 என்று வைத்து கொள்வோம். இதனை செக்குபந்தியில் எழுதும்போது வடக்கு பக்கம் கிணறு உள்ளது. கிழக்கு பக்கம் தார் ரோடு உள்ளது. மேற்கு பக்கம் 115 சர்வே எண் கொண்ட நிலமும் தெற்கு பக்கம் 118/3 சர்வே எண் கொண்ட இன்னாருடைய நிலம் உள்ளது எனவும் எழுதுவார்கள். இதனால் மிகவும் எளிமையாக நம்முடைய நிலத்தினை காண இயலும். மேலும் அதில் தென்வடல் கீழடி மேலடி என்றும் குறிப்பிடுவார்கள்.
இதையும் பார்க்க: நில அனுபவ உரிமை சான்று