Calculation நில அளவை வாய்ப்பாடு - நில அளவைகள் பற்றி நிச்சயம் நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில் காலி மனை, வீட்டு மனை, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என அனைத்திற்குமே அளவீடுகள் உண்டு. இந்த அளவீடுகளில் திருத்தமோ அல்லது பிழையோ இருந்தால் அவ்விடத்திற்கு எப்போதும் பிரச்சனை தான்.
நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீடுகளை கட்டி கொண்டுள்ளவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் பட்டா ஏற்றும் வசதி இல்லை. புதியதாக பட்டா வேண்டுமென்றால் மனு எழுதி கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் தற்போது உள்ள அளவீடுகளை தெரிந்துகொள்ள அல்லது திருத்தம் செய்த பட்டாவை ஆன்லைனில் எப்போதும் வேண்டுமென்றாலும் பார்த்து கொள்ளலாம். ஆனால் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு கொடுக்கப்படும் மேனுவல் பட்டாவில் பிழை திருத்தம் செய்திருந்தாலும் நேரடியாக விண்ணப்பித்து தான் பெற முடியும்.
இதையும் பார்க்க: நில அளவை கட்டணம்
இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டாவில் உள்ள நில அளவீடுகள் சென்ட் கணக்கில் எப்போதும் வருவதில்லை. அதனால் அதனை Calculation செய்ய சிரமமாக இருக்கும். அதனை பின்வரும் பத்தியில் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு 1
என்னிடம் ஒரு விவசாய நிலம் உள்ளது. அதன் அளவீடுகள் முறையே 70 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆகும்.
2100 சதுர அடி மேற்கண்ட நிலத்திற்கு வரும். இதனை சென்ட் கணக்கிற்கு மாற்றினால் 4.82 சென்ட் கிடைக்கும்.
எடுத்துக்காட்டு 2
எனது பட்டாவில் 0 - 2.35 என்று இருக்கிறது. இதனை சென்ட் கணக்கில் மாற்றினால் எவ்வளவு வரும்.
ஹெக்டேர் மற்றும் ஏர்ஸ் நில அளவீடுகள் தான் பட்டாவில் காண்பிப்பார்கள். இதனை சென்ட் கணக்கில் மாற்றினால் 5.80 சென்ட் கிடைக்கும்.
இதையும் பார்க்க: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை