பூமிதான இயக்கம் என்றால் என்ன

பூமிதான இயக்கம் என்றால் என்ன - தற்போது தமிழக அரசு எப்படி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு அல்லது பொது மக்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் ஆரம்பித்ததோ அதேபோல் தான் இந்த பூமி தானம் இயக்கமும். இதனை நிலக்கொடையாக்கம் என்றும் கூறி வருகிறார்கள். பூமிதான இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுகிறவர் திரு. பாரத ரத்னா வினோபாபாவே அவர்கள் தான். இவர் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வரையும் இந்தியா முழுவதும் உள்ள மிராசுதாரர்கள், நிலக்கிழார்கள், வசதி படைத்தவர்கள், நிலம் அதிகமாக உள்ளவர்களிடம் சென்று நிலங்களை தானமாக பெற்றார். இது வரைக்கும் 29 லட்சம் ஏக்கர் நிலங்களை தானமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.

பூமிதான இயக்கம் என்றால் என்ன


பூமிதான இயக்கம் முதன்முதலில் 1951 ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று 100 ஏக்கர் நிலங்களை தானமாக பெற்றதால் அன்றைய தினத்தை நாம் பூமி தான தினம் என்றும் அழைக்கிறோம். தமிழகத்தில் 29, 000 ஏக்கர்களுக்கும் அதிகமான கிராம தான இயக்கம் நிலங்கள் வந்தது. ஆனால் அவைகளில் 22, 000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மற்ற நிலங்களில் சில பல குளறுபடிகள் வந்ததால் அவைகள் இன்றளவும் மீட்கமுடியாமலும் சென்றுள்ளது.

நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம்

இதனை ஆரம்பக்காலகட்டத்தில் சர்வோதய இயக்கம் மூலம் நடத்தி வந்தார்கள். பின்னாளில் தமிழ்நாடு பூமிதான வாரியம் சென்னை 5 என மாறியது. இதன் முகவரி முதலில் மதுரையில் தான் இருந்தது. பிறகு சென்னையில் மாற்றினார்கள். என்னென்ன  காரணங்களுக்காக பூமிதான நிலங்கள் சிலருக்கு வரவில்லை அல்லது மற்ற நில உரிமையாளர்களின் பெர்மிஸ்ஸன் வாங்காமல் அவர்கள் நிலத்தினை பூமிதான போர்டு என பட்டா பெயர் மாற்றியது போன்ற குளறுபடிகள் பற்றி கீழே காண்போம்.

1. சில நில உரிமையாளர்கள் நிலங்களை தானம் செய்யும் நபர் புல எண்களை தவறாக குறிப்பிடப்பட்டது.

2. வாரிசுகளை கேட்காமல் தானம் செய்தது.

3. பூமிதானத்தை பிறருக்கு விற்க முயன்றபோது அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தியது.

4. பாகப்பிரிவினை மற்றும் நீதிமன்ற பிரச்சனைகளை இருக்கும்போது தானம் செய்தது.

5. நில உச்சவரம்பு சட்டம் 1970 படி, பூமிதானம் நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியது.

6. நிலம் இல்லாதவர்களுக்கு இது ஒரு நன்மையே. இதனால் விவசாயிகள் அதனை பயன்படுத்தி பயிரிடை செய்து வாழ்ந்து வந்தது.

7. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உபயோகப்படுத்தாமல் இருந்தால் அந்த நிலமானது ஆக்கிரமிப்பு செய்யப்படும்.

8. பத்திரப்பதிவு செலவு பூஜ்யம் ஆக இருந்தது.

9. யாருக்கும் விற்கமுடியாது.

10. தானம் வாங்குபவர் பட்டா பெயர் இருக்காது.

11. பூமிதான நிலத்தை யார் யாருக்கு வழங்கலாம் என்கிறதை சென்னை மாநில பூமிதான போர்டு தான் முடிவெடுக்கும்.

தமிழ்நாடு பூமிதான வாரியம் முகவரி

தற்போது சென்னை இல் சேப்பாக்க சட்டமன்ற தொகுதியில் உள்ள எழிலகத்தில் உள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2022