-->
அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி - உங்களிடைய பெயரை ஆன்லைனில் மாற்ற கூட வசதி தமிழக அரசு வகுத்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும். மேலும் 18வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் அவர்களுடைய பாதுகாவலர் அல்லது பெற்றோர் படிவத்தில் கையெழுத்து இட வேண்டும். 18 வயது மேல் உள்ளவர்கள் அவர்களாகவே படிவத்தில் கையெழுத்து இட வேண்டும். 

அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி


புதிய பெயர் அந்த படிவத்தில் எழுதும்போது வடமொழி மற்றும் ஆங்கிலத்தில் எழுத கூடாது. ஏன் பெயர் மாற்றுகிறீர்கள் என்று அதில் விவரம் தெரிவிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக 50 + 65 செலுத்த வேண்டும். நீங்கள் நேரில் சென்று பணத்தை கட்டி விடலாம். அல்லது செல்ல முடியாத பட்சத்தில் வரைவோலையாகவும் பணம் செலுத்தலாம். அதற்கான முகவரி கீழே கொடுப்பட்டுள்ளது.

உதவி இயக்குநர்,

எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம் 

சென்னை 02.

மேற்கூறிய முகவரிக்கு அஞ்சல் மூலம் DD எடுத்து அனுப்புங்கள். ஒருவேளை நீங்கள் நேரிலே சென்று பணம் கட்ட நேர்ந்தால் காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை மற்றும் மலை 02 மணி முதல் 03 மணி வரையும் செல்லவும்.

தமிழ்நாட்டிலே பிறந்ததற்கான அத்தாட்சியாக ஒரு சான்றிதழை வட்டாச்சியர் மூலம் நீங்கள் வாங்கி வர வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமே கையெழுத்து எழுது இட வேண்டும் 18 வயது ஆகாதவர்கள் தவிர. ஒரே ஒரே பிழை திருத்தல்கள் மற்றும் மாற்றி எழுதுவது, அடித்தல் போன்ற விஷயங்களை அதில் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்த அப்ப்ளிகேஷன் ரிஜெக்ட் செய்ய படும்.