வாரிசு சான்றிதழ் புதிய நடைமுறை அரசாணை

வாரிசு சான்றிதழ் புதிய நடைமுறை அரசாணை - வாரிசு சான்றிதழ் அடிப்படையில் தான் வாரிசுகள் யார் யார் என்று சொல்ல முடியும். வேறு வாய்மொழியாக இல்லாமல் எழுத்துப்பூர்வ ஆவணமாக இது கருதப்படுகின்றது. பொதுவாகவே பட்டா பெயர் மாற்றம், பத்திரம் பதிவு செய்தல், உயில் மெய்ப்பித்தல், வாரிசு பிரச்சனை, சொத்து பிரச்சனை ( அசையும் மற்றும் அசையாத சொத்து ) இவைகளுக்கெல்லாம் மூல ஆதாரமே இந்த வாரிசு சான்றிதழ் தான்.


வாரிசு சான்றிதழ் அரசாணை

29.09.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரிசு சான்றிதழ் சம்பந்தமான ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. அதில் அவர்கள் ஒரு முக்கிய நடைமுறை கொண்டு வந்தார்கள். அந்த அரசாணையில் என்னென்ன உள்ளது என்று கீழே ஒன்றன் பின் ஒன்றாக காணலாம்.

இதையும் படிக்க: தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம்

1. நாம் வாரிசு சான்றிதழ் வாங்கும்போது அந்நபர் சுமார் 06 மாதங்களுக்கு மேல் இருந்தால் அல்லது வசித்து இருந்தால் அங்கு இருக்கின்ற தாலுகா அலுவலகத்தில் தான் கேட்க முடியும்.

2. சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி என்றாலும் அந்நபர் எங்கு ஆறு மாதங்கள் வசித்திருந்தாரோ அங்கு இருக்கின்ற தாலுகா அலுவலகத்தில் தான் வரிசை சான்றிதழ் விண்ணப்பிக்க முடியும்.

இதையும் படிக்க: பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்