வருவாய் துறை பட்டா சிட்டா ( tamilnadu varuvai thurai patta chitta ) - பத்திர பதிவு துறையும் வருவாய் துறையும் சேர்ந்து தான் ஒரு நிலத்தின் உரிமை தன்மை நிரூபணம் செய்கின்றன. வெறும் பட்டா ஆவணத்தை வைத்து மட்டுமே ஒரு நில உரிமையாளர் உண்மைத்தன்மை வாய்ந்தவர் என்று கூற முடியாது. மாறாக பத்திர பதிவில் முறையாக பதிவு செய்த பின்னர் தான் அவர் நில உரிமையாளர் பதவியை முழுவதும் அடைகிறார்.
பட்டா மட்டுமே வருவாய்த்துறை கொடுக்கிறது என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு. ஆனால் அப்படி இல்லை என்றே தான் கூற வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் அதிகப்படியான வருவாய் ஈட்டி கொடுப்பதில் இந்த துறையும் ஒன்றாகும். ஒரு மாவட்டம் என்று எடுத்து கொண்டால் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், துணை ஆய்வாளர் , சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்கள் என பல்வேறு அரசு அலுவலர்கள் வருவாய்துறையின் கீழ் பணி நிமித்தம் செய்யப்படுகிறார்கள்.
பட்டா என்பது வருவாய்துறையினரால் கொடுக்கப்படும் ஒரு நில உரிமை சான்றாகும். அதனை கிராம நிர்வாக அலுவலர் மேற்பார்வையிட்டு வருவாய் ஆய்வாளர் சார்பார்த்த பின்னர் தான் தாசில்தார் வழங்குவார். இதில் ஏதாவது மாற்றம் பிழைகள் இருந்தாலோ நாம் பார்க்க வேண்டியது கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.
தற்போது பத்திரப்பதிவியிலேயே தானாக பட்டா மாற்றம் என்கிற திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். ஒருவேளை அங்கு செய்ய முடியாதவர்கள் பொது இ சேவை மையத்தில் சென்று அப்ளை செய்யலாம்.