வாரிசு சான்றிதழ் பெயர் நீக்கம் - வாரிசு சான்றிதழ் தற்போது மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் அதில் அதிக குளறுபடிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஏனெனில் நான்கு அல்லது ஐந்து நபர் கொண்ட வாரிசுகளில் ஏதாவது ஒருவர் அல்லது இருவரை மறைத்து சொத்துக்களை அபகரித்தல் போன்றவை தற்போதும் ஏராளமாக உள்ளன.
உண்மையான வாரிசுகள் சான்றிதழ்கள் வாங்கியிருந்தால் அதனை நீக்கம் செய்ய முடியாது. ஆனால் பிழை திருத்தம் போன்றவை இருந்தால் சான்றிதழ் பெற்ற குறைந்த நாட்களுக்குள் தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுத்து சரியாக இருக்கின்ற ஏதாவது ஒரு ஆவணத்தை இணைத்தால் போதுமானது.
இதையும் பார்க்க: Tamilnilam
முதல் நிலை வாரிசுகள் இல்லையென்றால் தான் இரண்டாம் நிலை வாரிசுகள் சொத்தில் உரிமை கொண்டாட முடியும். இரண்டாம் நிலை வாரிசுகள் முதனிலை வாரிசுகளுக்கு தெரியாமல் போலியாக வாரிசு சான்றிதழ் தயாரித்து இருந்தால் அதனை தாசில்தார் மற்றும் வழக்குரைஞர் மூலம் நாம் அதனை நீக்கம் செய்ய முடியும்.
இதையும் பார்க்க: Patta Chitta Ec