வாஸ்து உள் அளவா வெளி அளவா - மனையடி சாஸ்திரமே வாஸ்துவின் முதல் படிநிலை என்பதை நாம் தெரிந்து கொள்தல் அவசியமாகிறது. கட்டிடங்களை பொறுத்தவரையில் அனைவருமே வாஸ்து படி தான் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் 100 மற்றும் 150 அடி வரையும் மனையடி சாஸ்திரங்கள் பார்க்கப்படுகின்றது. இதில் பெரும்பான்மையான மக்கள் 100 அடிக்குள் வாஸ்து அடியை பின்பற்றுகிறார்கள்.
இந்த வாஸ்துவிலும் அறிவியல் கலந்துள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம் மனையடி சாஸ்திரங்களும் வாஸ்துவில் கலந்து உள்ளது. நமது வீட்டினுள் வருகின்ற வெளிச்சம், வெளியில் செல்லுகின்ற வெளிச்சம், வருகின்ற காற்று, வெளியில் செல்லும் காற்று மற்றும் காற்றோட்ட வசதிகள் சரியாக இருப்பதை இந்த வாஸ்து சாஸ்திரங்கள் நமக்கு மறைமுகமாக சொல்கிறது.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: வாஸ்து அளவுகள் 2023
மனையடி சாஸ்திரம் வீட்டின் உள் அளவா வெளி அளவா
சரி. மனையடி சாஸ்திரம் உள் அளவா வெளி அளவா என்கிற கேள்விக்கான விடையை தற்போது காண்போம். வீட்டில் உள் அளவு வைத்தால் வெளி அளவு சரியாக இருக்காது. அதேபோல் வெளி அளவு வைத்தால் உள் அளவு சரியாக இருக்காது. வெளி அளவு என்பது ஆதாய பொருத்தம் என்பார்கள். ஆதலால் அதனை எடுத்து கொள்ளாமல் உள்புறம் மட்டும் எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு
மேற்குறிப்பிட்டுள்ள பத்தியில் உள் பக்க அளவுகள் மற்றும் வெளி பக்க அளவுகளில் சந்தேகங்கள் இருக்குமாயின் உங்கள் வாஸ்து நிபுணர்களை ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம்.
இதையும் படியுங்க: பீரோ வைக்கும் திசை