உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்

உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் ( isd ) status - முதலில் உட்பிரிவு என்பது என்ன பற்றி பார்க்கலாம். சர்வே நம்பர் எனப்படும் ஒரு நிலத்தின் உரிமை எண்ணில் இருந்து பெறக்கூடிய ஒரு எண்ணாகும். ஒரு நிலத்தின் ஆதாரமாக பட்டா மற்றும் பத்திரம் இருந்தாலும் பட்டாவிற்கும் பத்திரத்திற்கும் கொடுக்கப்படும் எண் தான் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.

உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல்

ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு எண்ணை கொண்டு சர்வே செய்திருப்பர். இதனால் தான் இதனை சர்வே எண் என சொல்கிறார்கள். ஒரு சர்வே எண்ணில் இருந்து வரக்கூடிய அல்லது பிரித்து இன்னொரு நிலமாக இருப்பதை சார்ந்த சர்வே எண் கொண்டு மற்றொரு எண் கொடுப்பர். அதனை உட்பிரிவு எண் எனலாம்.

இதையும் படிக்க: TamilNilam

உட்பிரிவு செய்த நிலங்கள் வாங்கினால் அதனை பட்டா மாறுதல் செய்ய வேண்டும். ஏனெனில் ஏற்கனவே சர்வே எண் கொண்டு பட்டா ஆவணம் இருக்கும். அதனை உட்பிரிவு செய்தால் அதற்கு தனி ஆவணம், பத்திரம் மற்றும் பட்டா மாறுதல் கட்டாயம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: Tnreginet. gov. in patta chitta