தொழில் வரி ரசீது download in tamil

தொழில் வரி ரசீது download விலக்கு விசாரணை ஆன்லைன் விண்ணப்பம் ( - முதலில் தொழில் வரி யார் கட்ட வேண்டும் என்பதனை பற்றி பார்க்கலாம். வணிக கடைகளில் தொழில் செய்து கொண்டிருக்கும் அனைவரும் தொழில் வரி எனப்படும் Professional tax கட்டாயம் கட்ட வேண்டும். இதற்கு முதலில் தொழில் உரிமம் வாங்கியிருக்க வேண்டும். ஏனெனில் தொழில் வரி எண் ஒன்றினை கொடுப்பார்கள். அதனை கொண்டு தான் நாம் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ கட்ட முடியும். ஊராட்சிகளில் கடைகள் நடத்தி தொழில் செய்வோர் அங்கேயே உரிமம் பெற்று கொள்ளலாம். அதனை கிராம மன்ற தலைவரிடம் இருந்து பெறலாம்.

தொழில் வரி ரசீது download


ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 159 உட்பிரிவு 4 இன் கீழ் தொழில் வரி நிச்சயம் கட்ட வேண்டும். மேலும் 84 வகையான தொழில் செய்வோருக்கு ஏற்ப வரி வசூல் செய்யப்படும். மேலும் ஊராட்சியின் மக்கள் தொகை அல்லது நிதிக்கு ஏற்ப வரி வசூல் அதிகமாகலாம் அல்லது குறையலாம்.

இதையும் பார்க்க: TamilNilam

இதனை அரையாண்டிற்கு ஒருமுறை வீதம் வசூல் செய்வார்கள். இந்த வரி மூலம் ஊராட்சியின் நிதி நிலைமை அதிகமாகும். இதனால் அங்கு மற்ற இதர வசதிகளை பூர்த்தி செய்ய முடியும்.

இதையும் பார்க்க: EC Patta

குறிப்பு

மாநகராட்சிகளுக்கு மாத வருமானத்தை பொறுத்து வரி வசூல் கணக்கிடப்படும். மாத வருமானம் ரூபாய் 20, 000 க்குள் இருந்தால் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்க: Rti முதல் மேல்முறையீடு மனு