தவறான பத்திர பதிவு

தவறான பத்திர பதிவு - தவறான பத்திர பதிவு செய்யக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகள் பதிவுத்துறையில் செய்து வருகின்றனர். தவறான பத்திர பதிவின் மூலம் சொத்தின் உண்மையான உரிமையாளர் பாதிக்கப்படுகிறார் என்கிற நோக்கில் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.

தவறான பத்திர பதிவு உங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டால் மாவட்ட பதிவாளர் மூலம் அதனை நீக்கலாம். அப்படி இல்லையென்றால் உரிமையியல் நீதிமன்றம் சென்று உங்கள் நிலத்தை திரும்ப பெறலாம்.

தவறான பத்திர பதிவு


பத்திர பதிவு செய்யும்போது பழைய சொத்தின் விவரங்களை முழுமையாக பார்க்க வேண்டும். உதாரணமாக வில்லங்கம், பட்டா, சிட்டா, அ பதிவேடு மற்றும் பழைய ஆவணங்கள் ஆர் எஸ் ஆர், ஓ எஸ் ஆர் போன்றவைகள் சரிபார்க்க வேண்டும்.

இதையும் படியுங்க: Tamilnilam

சுற்றறிக்கை அக்டோபர் 2023

தற்போது வந்துள்ள சுற்றறிக்கை என்னெவென்றால் இனிமேல் பதிவு செய்யும் நிலங்களை அல்லது மனைகளை பதிவு செய்யவேண்டுமென்றால் அந்த நிலத்தை புகைப்படம் எடுத்து பத்திரத்தில் இணைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் காலி மனை அல்லது கட்டிடம் தவறாக பதிவு செய்வதை தடுக்க முடியும்.

இதையும் படியுங்க: EC Patta