தமிழ்நாடு பிர்காக்கள் எண்ணிக்கை 2024

தமிழ்நாடு பிர்காக்கள் எண்ணிக்கை 2024 ( how many firkas in tamil nadu in 2024 ) - ஒரு மாவட்டத்தினை கோட்டங்களாக பிரிப்பர். கோட்டமானது வட்டங்களாக பிரிக்கப்படும். வட்டங்களானது உள்வட்டங்களாக அதாவது பிர்காக்களாக பிரியப்படுகிறது. இந்த உள்வட்டங்கள் வருவாய் கிராமங்களாக மாறுகிறது.

தமிழ்நாடு பிர்காக்கள் எண்ணிக்கை 2024


பிர்காவை உள்வட்டம், குறுவட்டம் என சொல்லலாம். ஒரு தாலுகாவை எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமங்களை ஒரு உள்வட்டமாக பிரிக்கப்படும். இந்த உள்வட்டத்திற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் பணிபுரிவார். வருவாய் ஆய்வாளரே பிர்காவை பார்த்து கொள்வார். இவருடைய பணி நிலவரி வசூல் செய்தல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை மேற்பார்வையிடுதல் ஆகும்.

இதையும் பார்க்க: கிராம ஊராட்சி எண்ணிக்கை

தமிழ்நாட்டின் பிர்காக்களின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு 2024

தற்போது வரையும் சுமார் 1203 பிர்காக்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இதன் எண்ணிக்கை பின்னாட்களில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் பார்க்க: வருவாய் ஆய்வாளர் பணிகள் மற்றும் கடமைகள்