ஓரெழுத்து ஒரு மொழி 42 எழுத்துக்கள் pdf download

ஓரெழுத்து ஒரு மொழி 42 எழுத்துக்கள் pdf download ( oru eluthu sorkal 42 ) - தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளதை நாம் அறிந்ததே. இதில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களை கூட்டினால் வரும் விடை 247 ஆகும். தமிழில் ஒரே எழுத்துடைய எழுத்துக்கு வார்த்தைகள் இருப்பதை நம்மில் ஒரு சிலர் அறியாமல் இருப்பர். உதாரணமாக ஆடு என்பது ஒரு எழுத்தல்ல மாறாக அது வார்த்தையே ஆகும். ஆனால் ஆடு என்பதன் ஆ என்ற முதல் எழுத்துக்கு பசு என்கிற வார்த்தையும் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த ஆடு என்பதை ஒரு விலங்கினத்தை குறிக்கும். இது போன்று தமிழில் ஒரே எழுத்துடைய எழுத்துக்கள் மொத்தமாக 42 ஆக இருக்கிறது. இதில் ஒரு சிலர் 50, 25 ஓர் எழுத்து உள்ள சொற்கள் உள்ளது என நினைத்து கொள்கிறார்கள்.

ஓரெழுத்து ஒரு மொழி 42 எழுத்துக்கள் pdf download


ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் Pdf

1. து - உண்

2. நொ - நோய்

3. வெள - கவர்

4. வை - புல்

5. வீ - மலர்

6. வா - அழை

7. யா - அகலம்

8. மோ - முகத்தல்

9. மை - அஞ்சனம்

10. மே - பாசம்

11. மூ - மூப்பு

12. மீ - வான்

13. மா - மாமரம்

14. போ - செல்

15. ஆ - பசு

16. ஈ - கொடு

17. ஊ - இறைச்சி

18. ஏ - அம்பு

19. ஐ - தலைவன்

20. கா - சோலை

21. கை - ஒழுக்கம்

22. சோ - மதில்

23. சே - உயர்வு

24. கூ - புவி

25. கோ - அரசன்

26. சீ - இகழ்

27. ஓ -பலகை

28. சா -

29. பை - இளமை

30. பே - மேகம்

31. பூ - மலர்

32. பா - 

33. நோ - வறுமை

34. நே -பாசம்

35. நீ - முன்னிலை

36. தை - தைத்தல்

37. நா - நாவு

38. தே - கடவுள்

39. தீ - நெருப்பு

40. தா - கொடு

41. தூ - தூய்மை

42. நை - இழிவு

இதில் வா, மா, போ, தீ, பூ மற்றும் நா வார்த்தைகளை அடிக்கடி தமிழ் வாக்கியங்களோடு நாம் பார்த்திருப்போம். மற்ற எழுத்துக்களை அதிகமாக பயன்படுத்தி இருக்க மாட்டோம்.

உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை